விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள மாவோயிஸ்ட் தலைவர் கண்டனம்
[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2009, 07:12.28 AM GMT +05:30 ]
இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அந்த நாட்டு அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதாக நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இது கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற நடவடிக்கைகளை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.
தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறோம்.
அதேபோல உலக அளவில் உள்ள ஆயுதப் போராட்டங்களையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதிபட ஆதரிப்போம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் சேர்ந்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.
நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியதன் மூலம் நேபாள அரசு தவறு செய்து விட்டது. அதைத் திருத்திக் கொள்ள நான்கு நாள் அவகாசம் தருகிறோம். அதற்குப் பிறகும அது திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றார் பிரசந்தா.
பிரச்சண்டாவின் இந்த அறிக்கை வரவேற்கத் தக்கது.இந்தியாவே அருள் பாலி என்று இறைஞ்சும் நாம், இந்திய உபகண்டத்தில் உள்ள எமது உண்மையான நேச சக்திகளை இனம் காண மறுக்கிறோம்.இந்தியாவின் மாவோக்களும், நேபாள மாவோக்களும் இந்தியா எங்கனம் நடைபெறும் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களை அங்கீகரிக்கிறார்கள்.எல்லோரது எதிரியாகவும் இந்திய வல்லாதிக்கம் இருக்கிறது.ஒரு பலமான எதிரிக்கு எதிராக கூட்டு முன்னனியை அமைக்காமல் , நாம் மீண்டும் மீண்டு எம்மைப் பின்னால் இருந்து வஞ்சகமாகக் கொலை செய்யும் எதிரியிடம் மன்றாடுகிறோம்.இவர்களை அடித்துக் கொலை செய்தாலும் மீண்டும் மீண்டும் இவர்கள் எங்கள் காலடியிலையே வந்து கிடப்பார்கள் என்றே ,இந்திய வல்லாதிக்கம் நினைக்கிறது.ஏனெனில் நாம் இந்தியாவை எமது தேசமாகப் பார்க்கிறோம்,ஆனால் அதன் கட்டமைப்பை அதன் ஆளும் வர்க்கத்தின் பின் புலத்தைப் நாம் பார்க்கவில்லை.இந்தப் பார்வை தமிழ்த் தேசிய அடையாளத்தை வேளாளச் சைவத் தமிழ்த் தேசியமாகாப் பார்ப்பதினூடாகவே வருகிறது. நாம் இந்த பிற்போக்கான தேசியப் பார்வையை அறுத்து எறியாதவரை, இந்தியாவை காந்தி தேசமாகவே பார்ப்போம்.
இந்தியாவின் வடகிழக்கில் மவோக்களும்,மணிப்பூரிகளும், நாகலாந்து, மிஸோக்களும் பலமான ஒரு முன்னணியை அமைத்து வருகிறார்கள்.இதன் பின்னணியில் சீனா உள்ளதை எவரும் புரிந்து கொள்ளலாம்.இவ் உலகு அமெரிக்கா தலமையில் மேற்குலக அணியாகவும், வளர்ந்து வரும் சீனாவின் தலமையில் ரசியா, இரான் என்னும் ஆசியக் கூட்டணியாகவும் இரு துருவ நிலைக்குள் செல்ல இருக்கிறது.இதில் இந்தியாவையே மேற்குலகு ஆசியக் கூட்டணியை சமப்படுத்த உபயோகிக்கிறது.பலமான இந்தியா ,சீனாவுக்கு ஆபாத்தானது என்பதை சீனா உணர்ந்து உள்ளது.இந்தியாவைச் சுற்றியும் ,அதனனுள்ளேயும் அது அதன் பிடியை இறுக்கி வருகிறது. நேபாளாத்தில் நடக்கும் இழு பறிக்குப் பின்னால் சீனாவே இருக்கிறது.இந்த இரு துருவ இழு பறியை நாம் பயன் படுத்தும் தருணம் இதுவே.
இந்திய நேபாள மவோக்களுடனும்,இந்தியத் தேசிய இன விடுதலை அமைப்புக்களுடனும் ,தமீழீழத் தேசிய சுய நிர்ணய அங்கீகரிபின் அடிப்படையில் பொது முன்னணி அமைக்கப்பட வேண்டும்.இதன் மூலம் சீனாவுடனான தொடர்புகளையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்திய ஆளும் வர்க்கம் அதனுள் இருக்கும் எல்லாத் தேசிய இனங்களையும் ஒடுக்கிறது.மொழிவாரி மானிலங்கள் மூலம் அது தேசிய சுய நிர்ணயத்தைக் குழு தோண்டிப் புதைத்து , கருணாநிதி போன்ற அடிமைகளின் மேய்ப்பர்களை அமர்த்தி உள்ளது.இந்த கூலித் தலைவர்களை நம்பி இராமால் நாம் வெகு வேகமாக செயலாற்ற வேண்டும்.இதனை உணர்ந்தே ரோ ,தற்போது புலிகளுடன் பேச விரும்புவதாக நாடகமாடுகிறது.
India's Maoist Revolution - India
It is described as an economic miracle and celebrated as the world's largest democracy. But away from India's booming cities, poverty and despair are creating a violent wave of Maoism.
Produced by SBS/Dateline
Distributed by Journeyman Pictures


0 comments:
Post a Comment