தமிழில் இனிப் பதிவெளிதி எதுவித பிரியோசனம் இல்லை என்னும் நிலையில் எதுவும் எழுதாது , கடந்த ஐந்தாறு மாதங்களாக என்னால் முடிந்த அனைத்தும் செயற்பாட்டு ரீதியாகச் செய்தாகி விட்டது.
பிரித்தானியாவில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்த கூட்டங்கள் ,சந்திப்புக்கள்,வீதி மறியல்,உண்ணாவிரதம், பேரணி என ஒரளவு எமது கதையையை பரவலாகச் சொல்லியாகி விட்டது.பிரித்தானியாவின் அரசியலாளர்கள்,பிரதான ஊடகங்கள் என இன்று ஓரளவு கவனிப்பு இருக்கிறது.ஐனாவிலும்,மனித உரிமை கவுனிசிலும் பேசியாகி விட்டது.இருபதினாயிரம் மக்கள் எந்த சாட்சியமும் இன்றி கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள் என்று டயிம்ஸ் ஆதாரத்துடன் கட்டுரை எழுதுகிறது.ஐ நா வினால் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாக இப்போது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.இவை எல்லாவற்றையும் பார்க்கையில் நாம் ஏற்கனவே அறிந்திருந்த முடிவு தான் எம் கண் முன் வருகிறது.இந்த உலகம் சுய நலங்களின் அடிப்படையிலேயே பொதுவாக இயங்கிறது.அது கருணானிதியின் பதவி மோகம் என்றாலும் பான்ங்கிமூன், சதீஸ் நம்பியார், சோனியா, நாரயணன் குழு என எல்லோரும் சொந்த நலங்களால் இயங்கிறார்கள், இயக்கப்படுகிறார்கள்.இவற்றுக்கு எதிராக ஆங்காங்கே ஒரு சிலர் உண்மைக்காகவும்,மனித நேயத்துக்காகவும் தமது உயிரைக் கொடுத்து போராட வேண்டி உள்ளது.
இந்த நிலையில் தமிழ்ப் பதிவுலகிலும் புலிகளின் தமிழ்த் தேசிய விடுதலைப் போர் வெற்றியடையும் தோற்றப்பாடு இருந்த நிலையில் பல் வேறு நாடுகளில் பாதுகாப்பாக இருந்த வண்ணம் நாமும் புலிகளுடன் தான் எனச் சொந்தம் கொண்டாடிய பதிவர்கள் இன்று பிச்சை வேண்டாம் நாயயைப்பிடி அல்லது அன்று நாம் மவுனமாக இருந்தோம் இன்று புலி அழிந்த பின் புலியைப்பற்றி பேசுகிறோம் அல்லது நாம் எழுதிய இராணுவ ஆய்வைப் புலிகள் பொய்க்க வைக்க வைத்திட்டார்கள் என்பது போன்ற மன நிலையில் இருந்து தம்மைப் புனிதர்களாகக் கட்டமைத்து எழுதும் பதிவுகளுக்கு ,எதிர்வினை ஆற்ற வேண்டும் என்னும் நிலையிலையே இந்தப் பதிவு.
புலிகள் தவறைழைந்தனேரே, அவர்கள் பூகோள நலங்களின் அடிப்படையில் தொழிற்படும் இந்த உலகில் தமக்கென ஒரு நலன் சார் கூட்டை உருவாக்கமால், தனத்து நின்று இந்த உலகின் போரை எதிர்கொண்டனர்.சாதூரியமாக காய் நகர்த்திய சிறிலங்கா இந்தியா,சீனா போன்ற வளர்ந்துவரும் பிராந்திய ஏகாதிபதியங்களிடம் இருந்து அதி உச்ச உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.இந்தியா கடல் வழி முற்றுகையை இறுக்கியது, புலிகளின் பல ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டன.சீனா குண்டு வீச்சு விமானங்களை இலவசமாக வழங்கியது.பாக்கிஸ்த்தான் நவீன வேவு விமானங்களையும் போர்த் தளபாடங்களையும் வழங்கியது.இந்த நிலையில் போர் என்பது சிறிலங்கா அரசிற்குச் சாதகமாகவே இருந்தது.இவை அனைத்தையும் நாம் ஒன்று பட்டு எமது மன உறுதியினால் எதிர்கொள்வோம் என்று புலிகள் நம்பினார்கள்.மன வலுவுடன் மூர்க்கமாகத் தாக்கினால் சிங்கள இரானுவத்தை நிலை குலைய வைக்கலாம் என்று நம்பினார்கள்.அந்த அதீத நம்பிக்கையே அவர்களை மக்கள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் குவிய வைத்தது.குறிப்பாக புதுக் குடியிருப்புத் தாக்குதற் தோல்வியுடன் புலிகளின் தலமை தம் மீதே நம்பிக்கையீனம் அற்று, தம் கண் முன்னால் நிகழும் இழப்புக்களின் தாக்கத்தில் தம்மையே அழித்துக் கொள்ளும் திட்டத்துடன் தொடர் போராட்டத்தில் நம்பிக்கையற்று வென்றால் வாழ்வு தோற்றால் சாவு என்னும் நிலைப்பாட்டுக்கு வந்து இருந்து போல் தெரிகிறது.தம் முன்னால் நிகழும் மனிதப்பேரவலம் அவர்கள் மேல் கடுமையான மன அழுத்ததைப் பிரயோகித்து இருக்கலாம்.இந்த நிலையில் அவர்கள் போராட்டம் பற்றி அறிவார்ந்து சிந்திக்காமால் பல பிழையான முடிவுகளை எடுத்து இருக்கலாம்.மக்கள் மீதான வன் முறையையும் நாங்கள் அவ்வாறே நோக்க வேண்டும்.புலத்தில் பாதுகாப்பான சூழலில் நாம் இருக்கும் நிலையில் சிந்திப்பதற்கும், கடுமையான மனிதப் பேரவல நெருக்கடிகளுக்குள் இருந்து சிந்திக்கும் சூழலுக்கும் வேறு பாடு இருக்கிறது.
போராட்டத்தின் எதிர்காலத்தை ,தமது பலவீனம் எது , பலம் எது , எதிரியின் பலம் எது பலவீனம் எது என்பவற்றில் இருந்து கணிக்கத் தவறியது தலமைத்துவக் குறைபாடே.எல்லாக் குறைபாடுகளுக்கும் அப்பால் அவர்கள் தமிழ் மக்களுக்காகவே உண்மையாகப் போராடினார்கள், தமது உயிரை தாம் கொண்ட இலட்சியதுக்காகக் கொடுத்தார்கள்.வெற்று வார்த்தைகளை உதிர்ந்து தமது சொந்த விடயங்களைப் பார்த்துக்கொள்ளாமால் , இணையத்தில் பொழுது போக்காப் புரட்சி செய்யாமால், தமது தீர்வை நோக்கிய செயற்திட்டத்துக்கு தமது இன்னியுரை அர்ப்பணித்தார்கள்.அவர்கள் பிழைகள் விட்ட உயரிய மனிதர்களே,கடவுளர் அல்ல.
இனி என்ன?
இத்தோடு இந்தப் போர் ஓய்ந்து விடுமா? புலிகளும் பிரபகாரனும் , தமிழர் மீதான ஒடுக்குறை பிரசவித்த குழந்தைகள்.மிகக் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்படும் தமிழர்களிடம் இருந்து இன்னும் மிகக் கொடூரமான குழந்தையே பிறக்கப் போகிறது.அதை இந்த உலகம் எதிர் கொள்ளத் தான் வேண்டும்.அதுவரை எம்மால் இப்போது செய்ய வேண்டியது சிறிலங்கா அரசால் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் , வதை பட்டுக் கொண்டிருக்கும் மூன்று இலட்சம் மக்களையும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பக் கொண்டு வருவதே.அவர்களை இந்தக் கொடூரமான முகாம்களுக்கு வெளியால் கொண்டுவர வேண்டும்.இதனை செய்வதே எமது தலையாய கடமை.நாம் இதனைச் செய்யாது புலிகளைப் பற்றியும் பிரபகாரனைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பதில் எந்தப் பிரியோசனமும் இல்லை.இவை ஏற்கனவே வெறும் வாயை மென்று கொண்டு இருப்பவர்களுக்கு அவலைக் கொடுதற்குச் சமனாகும்.
புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் நாம் செய்யும் மிகப் பெரிய அஞ்சலி அவர்கள் நேசித்த அந்த மக்களைக் காப்பதே.இதை விடுத்து நாம் எமக் குள்ளாகவே அவர்,பிழைவிட்டர், இவர் வியாபாரம் செய்தார் அதனால் தலமை அழிந்தது என்று ஆதாரம் எதுவுமின்றி நொண்டிக் குற்றச்சாட்டுக்களை ஊகங்களின் அடிப்படையில் எழுதிக் கொண்டிருப்பது மிகத் தவறான அணுகுமுறை.இவை தேவையற்ற பிரிவினைகளை உருவாக்கி எம்மையே பலவீனப்படுத்தும்.எந்த இலட்சியத்திற்காக ஆயிரம் ஆயிரம் மிக உயரிய மனிதர்கள் தம்மை அர்ப்பணித் தார்களோ அவர்களின் தியாகங்கள் வீணாகி விடக்கூடாது.
இன்னொரு பிரபகாரன் அவதரிக்கும் வரை நாம் அமைதி காத்து நிதானமாகச் செயற்பட வேண்டும்.ஒற்றுமையே பலம்.அறிவார்ந்த செயற்பாடும், அரசியற் தெளிவும் , மன உறுதியுமே எம்மை வாழ்விக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)


4 comments:
//பிரித்தானியாவில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்த கூட்டங்கள் ,சந்திப்புக்கள்,வீதி மறியல்,உண்ணாவிரதம், பேரணி என ஒரளவு எமது கதையையை பரவலாகச் சொல்லியாகி விட்டது//
போரின் தோல்வியால் நிறைய பேர் விரக்தியடைந்துள்ளது தெரிகிறது.இராணுவ ரீதியாக தோல்வியாக எடுத்துக் கொண்டாலும் உலக அளவில் ஈழம் குறித்த பார்வை எழுந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இப்போதைய சூழலில் வாய் மூடி மௌனமாகிப் போகாமல் மனித உரிமைக்காக குரல் தரும் அமைப்புக்களுடன் சேர்ந்து முட்கம்பி வாழ்க்கைக்கு வெளியே மக்கள் வருவதற்கான வழிகளை தேட வேண்டும்.
புலம் பெயர் தமிழர்கள் இப்போது சரியான பாதையிலே போய்க் கொண்டிருக்கிறார்கள்.சோர்வடையாமல் அந்த அந்த நாட்டு சட்டங்களுக்குட்பட்டு ஒன்றாக செயல்படுவது நலன் விளைவிக்கும்.
இனி கண்முன் இருப்பது இரு வழிகள்.ஒன்று அகதி கம்பிக்குள் இருப்பவர்களுக்கு நடப்பது நடக்கட்டும் என்று கண்மூடிக் கொண்டு நமது அன்றாட வாழ்வை தேடிப் போய் விடுவது.அல்லது ஏதாவது ஒரு வழியில் உதவுவதற்கான வழிகளை ஆராய்வது.
பதிவுக்கு நன்றி.
நீங்கள் சொல்வது சரி.
புலிகள் தவறு செய்திருக்கிலாம்.
பெரிய வல்லரசுகள் ,பெரிய நாடுகள் செய்த தவறுகளைவிட அவர்கள் பெரிய தவறுகளையோ கொடுமைகளையோ செய்யவில்லை.
தாங்கள் கொண்டிருந்த லட்சிய நோக்குக்காக அதை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சில தவறுகளையும் பல தியாகங்களையும் செய்து ,எந்த மண்ணில் பிறந்தார்களோ அந்த மண்ணிலேயே போராடி மடிந்து விட்டார்கள்.
தலைவர்களில் சிலர் உயிரோடு இருக்கலாம் அல்லது போராட்டத்தில் இறந்து இருக்கலாம் ,
எப்படி இருந்தாலும் அவர்கள் எங்கள் மனங்களில் எப்போதுமே குடி கொண்டு இருப்பார்கள்.
அதனால் அதைப் பற்றி விவாதம் ,பட்டிமன்றம் ஒன்றும் இப்போது வேண்டாம்.
இந்த நேரத்தில் புதிது புதிதாக முளைத்து ஈழத்தமிழர் போராட்டம் பற்றி விமர்சனம் ,மாற்றுக்கருத்து என்ற பெயரில் தமிழர்களின் மனநிலையைக் குழப்பி அவர்களுக்கு சோர்வு உண்டாக்கும் எண்ணத்தில் உளவியல் போரில் ஈடுப்பட்டிருப்பவரின் கருத்துக்களையோ அல்லது புலிப்பாசிசம் என்று பாட்டு பாடியே தங்கள் வாழ்க்கையைக் கழிப்பதைத் தவிர வேறு ஒன்றுமே தமிழ் மக்களுக்கு செய்யாத பேர்வழிகள் பற்றியோ நாங்கள் அலட்டிக்கொள்ளாமல் அங்கு அல்லலுறும் எமது மக்களுக்கு நாம் எல்லாரும் ஏதோ எம்மால் ஆன விதத்தில் உதவி செய்து அவர்களை முகாம்களில் இருந்து வெளியேற்றி தமது சொந்த இடங்களுக்கு போவதற்கான முயற்ச்சிகளை செய்வோம்.
இதில் புலம்பெயர் ஈழத்தமிழர் மட்டுமின்றி தமிழகத் தமிழரும் தம்மால் ஆன உதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பிரபாகரனே!
என் தலைவனே
என்னை ஈன்று எடுக்கா தாயே! தளபதியே!
உன் போராட்டம் ஆரம்பமாகிற போது- பிறக்கவில்லை நான்
பிறந்திருந்தால் உன்னுடன் போர்க்களம் புகுந்திருப்பேன்
என் கட்ட விரல் வாயில் இருக்கும் போது- உணரவில்லை நான்
என் இனத்திற்காக ஒரு எரிமலை எழுந்திருக்கிறது என்று !
அறியா வயதில் உன் முதல் மரண நாடகத்தை கேட்டேன்
அப்போதும் நான் நம்பவில்லை
என் இனத்தின் ஆலமரம் சாய்ந்ததென்று
இரண்டாம் முறையாக உன் மரணத்தைக் கேட்க
என் செவிகளே மறுத்துவிட்டன
உணர்ந்தேன்..... உணர்ந்தேன்
நீயே என் தொப்புல் கொடி உறவு என்று...
உணர்ந்தேன்....... உணர்ந்தேன்
இந்தியா என் நாடல்ல... ஈழம் தவிர வேறு ஏதுடா பிறந்த நாடு...
நெஞ்சம் பொறுக்கவில்லை..
அங்கே என் உறவு மடிகின்ற செய்தி கேட்டு...
என் உடன் பிறவா புலிகளே..
என்னை அழைத்துச் செல்லுங்கள் உங்களுடன்..
நானும் போராடுகிறேன் உங்களுடன்...
கவிதைக்காக இல்லை மேலேயுள்ள வரிகள்...
சிங்கள ராணுவமே காத்திரு...
புலிகளை அழித்து விட்டோம் என்ற ஆணவம் வேண்டாம்....
ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டாய் சிங்களனே...
என் தலவனைக் கொன்றுவிட்டோம் என்ற நாடகத்தை நடத்தி....
அமைதியாய் இருந்த உலக தமிழர்களை..
என் தலைவனிடம் பயிற்சி பெறாத புலிகளாக மாற்றி விட்டாயடா....
காத்திரு சிங்களனே...
இனி உனக்கு சாவு மணி காத்திருக்கிறது 5-ஆம் ஈழப் போரில்...
வருவார் என் தலைவன்..
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு...
ஓய மாட்டார் என் தலைவர்...
தமிழர்காக ஈழம் பெறும் வரை..
மரணமே அவரைக் கண்டால் நடுங்குமடா..
-தமிழன்-
http://twitter.com/mmauran/status/1975034135
Post a Comment