




கொழும்பில் வான் புலிகள் நடாத்திய குண்டுத் தாக்குதலில் கெளனி திச அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் சேதம் அடைந்துள்ளன.சிறிலங்கா அரசு சிறு சேதம் என்று மூடி மறைக்க முயன்றும் தற்போது டெய்லி மிரர் பத்திரிகையால் இந்த சேத விபரத்தைக் காட்டும் படங்கள் வெளீயிடப்படுள்ளன.மன்னாரிலும் சேதம் சிறிது என்று சிறிலங்கா அரசு சொல்லி இருக்கிறது.ஆனால் அங்கு பத்திரிகையாளர்கள் எவரும் இல்லை.இவ்வாறு தான் கடந்த சில வருடங்களாக சிறிலங்கா அரசு கள நிலவரம் பற்றி முற்றிலும் பொய்மையான பிரச்சாரத்தை செய்து சிங்கள மக்களையும் உலகையும் ஏமாற்றி வருகிறது.
படங்கள் நன்றி டெய்லி மிரர்
தாக்குதலின் போது அண்மையில் வசித்த சிங்கள மக்களால் எடுக்கப்பட்ட காணொளி.இதில் முதலில் கேட்பது புலிகளின் விமானக்களின் சத்தம்,அவர்கள் குண்டை வீசிய பின்னரே விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளின் சத்தம் கேட்கிறது.விமானம் குண்டை வீசிச் சென்ற பின் மின் நிலையம் தீப்பற்றி எரிகிறது என்று சொல்கிறார்கள்.அதன் பின்னரான விமான எதிர்ப்புச் சூடுகள் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரையே
செல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால் விமானங்கள் குண்டை வீசிச் சென்று விட்ட பின்னரே வானை நோக்கி இலக்கற்று சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


1 comments:
நன்றி...
Post a Comment