Wednesday, 23 July 2008

This Is England ( 2007) - நிறத்தின் அரசியல்




இங்கிலாந்தில் காத்திரமான திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் சனல் நான்கில் அண்மையில் Shane Meadows இன் This Is England ப் பார்க்க முடிந்தது.எண்பதுகளில் தட்சரின் ஆட்சியின் சமூக முரண்பாடுகளின் பின் புலத்தில் போக்லண்ட் யுத்ததைப் பின்னணியாகக் கொண்டு யதார்த்தில் எவ்வாறு நிறவெறி அரசியல் தொழிற்படுகிறது என்பதை ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் பார்வையில் சொல்கிறது This Is England.

தனக்கென தனித்துவமான ஒரு கதை சொல்லும் பாணியைக் கொண்ட சேன் மெடோவ்ஸின் பதின்ம வயதுச் சுய அனுபவங்களைத் தழுவியதாக திரைக் கதை அமைந்திருக்கிறது. எண்பதுகளின் இங்கிலாந்தும் மிக நுட்பமாக மீள நிர்மாணிக்கப்படிருக்கிறது.


பன்னிரண்டு வயதை உடைய தந்தையை போக்கிலண்ட் யுத்தத்தில் இளந்த தொழிலாள வர்க்கத்தைச் சார்ந்த சான் வீல்டனை மையமாக வைத்து நிகழும் சம்பவங்களைக் கோர்வையாக்கியே கதை பின்னப்படிருக்கிறது.இதில் நடிக்கும் சிறுவனும் உண்மையிலையே தந்தையை இழந்த தெருச் சிறுவனகா இருப்பதால் இயற்கையிலையே அவன் பாத்திரத்துடன் ஒன்றி விடுகிறான்.கதாபாத்திரத்தின் நுண்ணிய உணர்வுகளை வெகு இயல்பாகப் பிரதிபலிக்கிறான்.

செய்வதற்கு ஒன்று மற்ற வாழ்க்கையில் எந்த எதிர்ப்பர்ப்புக்களும் இன்றி தெருவில் திரியும் சான்னுக்கு ஸ்கின் ஹெட்ஸ் என்னும் தெருக் குழு அடையாளத்தையும் நட்பையும் தருகிறது.இந்தக் குழுவுக்குள் நிறவெறி அரசியலைக் கொண்டு வருகிறான் கொம்போ என்னும் சிறையில் இருந்து மீண்டு வரும் ஒருவன்.தனது சுய குறைபாடுகளை நிறை வேறா ஆசைகளை இட்டு நிரப்பும் ஒரு வடிகாலாக கொம்போ நசனல் fரண்ட் என்னும் இன வெறிக் கட்சியின் தெருச் செயற்பாட்டளாராக மாறுகிறான்.சாண்ணையும் அவனது நண்பர்களையும் இந்த இனவெறிக் கட்சியின் கூட்டங்களுக்கு அழைக்கிறான், தெரு முனையில் இருக்கும் இசுலாமியக் கடைக்காரரிடம் கொள்ளை அடித்தல் இனவெறித்தனமாக இசுலாமியச் சிறார்களை ஏசுதல் என்று நடைமுறையில் இன்றும் இங்கிலாந்த்தில் காணக் கூடிய எல்லா இனவெறித் தனக்களும் இந்தக் குழுவால் அரங்கேற்றப்படுகிறன.இதில் உடன்பாடில்லாதாவர்கள் குழுவில் இருந்து வெளியேறுகின்றனர்.

நசனல் fரண்ட்டின் கூட்டங்கள் வெகு தத்துரூபமாக திரையில் வருகின்றன.அடி மட்டத் தொண்டர்கள் ஸ்கின் ஹெட்ஸ் என்னும் தெரு ஓரப் பதின்மர்களாக இருக்கும் போது அதனை இயக்கும் தலைவர்கள் ஆடம்பரமான கார்களில் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு வரும் கனவான்களாக இருக்கின்றனர்.உலகெங்கும் நடக்கும் வந்தேறிகளே உனது சமூக பொருளாதார அவலத்துக் காரணம் என்னும் நிறவெறியின் அரசியலைப் புகட்டுகின்றனர்.இடை இடையே தட்சரின் போக்கிலாண்ட் யுத்தமும் , தமது தேசியப் பெருமிதத்தை முன் நிறுத்தப் போரிட்ட ஆர்ஜண்டீனாவின் வாடி வதங்கிய இளம் போர் வீரர்களின் படங்களும் அவர்களைக் கைது செய்து கொண்டிருக்கும் பிரித்தானிய நவகாலனியின் இன்றைய வீரர்களும் காட்டப்படுகின்றனர்.இந்த மேற்கத்தைய அரசுகளின் நவகாலனிய யுத்தங்களின் பின்னால் இருக்கும் இனத்துவ வெறியின் படிமங்களுக்கும் தெரு ஓர நிறவெறிக்கும் இருக்கும் தொடர்பை பார்வையாளரிடமே விட்டு விடுகிறார் சேன் மெடோவ்ஸ்.இன்றைய இராக்கிய ஆப்கானிய யுத்தங்களுக்கும் அன்றைய போக்கிலாண்ட் யுத்ததிற்கும் கருத்தியல்,சமூக பொருளாதார நிலைகளில் எந்த வேறு பாடும் கிடையாது என்பதே ,இத்தகைய கதைக் களத்தைத் தேர்ந்தேடுத்த Shane Meadows இன் நோக்கமாக் இருந்திருக்க வேண்டும்.மேற்குலக ஏகாதிபத்தியத்தை நோக்கிய விமர்சனப் பார்வையை ஸோனின் அரசியற் படங்களில் பொதுவாகக் காணலாம்.

இன்றைய சூழலில் இசுலாமியர்களுக்கு எதிராகவும் ஆசியர்களுக்கு எதிராகவும் தோற்று விக்கப்படிருக்கும் பயங்கரவாதி என்னும் பட்டமும் மனிதாபிமானம் ஜன நாயாகம் எனப் பேசும் மேற்கின் கனவான் அரசியலின் பின்னால் இருக்கும் அதன் போலிக் கரிசனைகளையும் உண்மையான நிறவெறியின் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் அரசியலையும் புரிந்து கொள்ளவும் எவ்வாறு நிராகரிக்கப்பட்ட பொருளாத்தாரத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்களை இந்த அரசியல் தமது நலங்களுக்கு அமைவாகாப் பயன் படுத்துகிறது என்பதையும் எமக்குக் காட்டுகிறது This Is England.

நேர்த்தியான் தத்துரூபமான ஒளிப்பதிவு எண்பதுகளை மையமாக வைத்து புனையப்பட்ட காட்சி அமைப்பு ஆடைகள் இசை என மிகவும் நேர்த்தியாகப் படமாக்கப் பட்டிருக்கிறது.

படத்தின் இணையத் தளம்

This Is England - trailer










This Is England" - Shane Meadows Interview



This Is England on Newsnight Review

2 comments:

dj said...

ப‌கிர்ந்த‌மைக்கு ந‌ன்றி அற்புத‌ன். கெதியாய்ப் ப‌ட‌த்தைப் பார்க்கின்றேன்.

அற்புதன் said...

டிசே படம் டிவிடியில் அங்கு வந்து விட்டதோ தெரியவில்லை,விசாரித்துப் பார்க்கவும்.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.