

அண்மையில் கானப்பிரபாவின் கம்போடியச் சுற்றுலாப் பதிவைத் தொடர்ந்து பலர் தென்கிழக்காசியாவில் பல்லவர் செல்வாக்குப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டிருந்தனர். அக் கேள்விகளுக்கான பதில்கள் கா.இந்திரபாலா அவர்கள் எழுதிய இலங்கையில் தமிழர் என்னும் புத்தகத்தில் வாசித்திருந்தேன்.(பார்க்க எனது முந்தைய பதிவை)
பலருக்கும் இந்தத் தகவல்கள் பயன் பெறும் என்பதால் அந்தப் புத்தகத்தில் இருந்து தென்கிழக்காசியாவில் இயங்கிய பல்லவ வணிகக் கணங்கள் பற்றிய பகுதிகளை இங்கே பதிகிறேன்.
பல்லவர்களுடைய ஆதிக்கப் படர்ச்சியின் ஒரு முக்கிய விளைவு கடல் வணிகம் முன் நேற்றம் அடைந்து வணிகக் கணங்களின் நடமாட்டம் வங்காள விரிகுடாவில் தெனிந்தியாவுக்கும் தென் கிழக்காசியாவுக்கும் இடையில் பெருகியமையாகும்.இதன் ஒரு கூறாக இலங்கையுடன் நடைபெற்ற வணிகம் அமைந்தது.இலங்கையில் தமிழ் இனக் குழு மேலும் வலுப் பெறுவதற்க்கு உதவிய காரணிகளுள் மிகவும் முக்கிமானதாக இவ் வணிக வளர்ச்சியைக் கருத வேண்டும்.
ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் பல்லவப் பேரரசு எழுச்சி பெறத் தொடங்கியதும் தமிழ்னாட்டின் கடல் கடந்த வர்த்தகம் செழுப்புற்றது.ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாகத் தென்கிழக்காசிய வர்த்தகத்தில் தமிழ்னாட்டு வர்த்தகர் முக்கிய பங்கெடுத்தனர்.அவர்கள் செயல்களால் வர்த்தகம் வளர்ச்சியுற்றது மட்டுமன்றித் தென் கிழக்காசியாவிலும் இலங்கைலும் பல்லவர் பண்பாட்டுக் கூறுகளும் பவுத்த சைவ சமயங்களின் செல்வாக்கும் பரவின.
ஆறாம் நூற்றாண்டிலிருந்து கவனிக்கக் கூடிய ஒரு விடயமாக வணிகக் கணங்களின் வளர்ச்சி அமைகின்றது.பல்லவ அரசின் எழுச்சி கடல் கடந்த வர்த்தகதுக்குத் துணையாக இருந்த சூழ் நிலையில் வணிகக் கணங்கள் தமிழ் நாட்டுத் துறைகளில் இருந்தும் இலங்கைக்கும் தெங்கிழக்காசியாவிற்க்கும் கூடுதலாகச் செல்லும் அளவுக்கு வலுப் பெற்றன.இதனை வெளிப்படுத்தும் தொல்லியல் சன்றுகள் தமிழ் நாடு,இலங்கை,மற்றும் தென்கிழக்காசிய நாடுகளாகிய தாய்லாந்து,வியட் நாம் அகிய இடங்களில் கிடைதுள்ளன.இவ்விடங்களில் தென்னிந்திய வணிகக் கணங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகளில் பவுத்த சங்கத்தார்,பிராமணர்கள்,மற்றும் சிற்பிகள் ஆகியோரும் பங்கு கொண்டனர்.கிழக்கு கரைத் துறைகள் குறிப்பாக நாகபட்டினம்,மாமல்லபுரமும் வங்காள விரிகுடாவுக்கு அப்பால் கிழக்கு இலங்கயின் துறைகளாகிய பல்லவ வங்கம்,திருகோணமலை ஆகிய துறைகளுடன் தென் கிழக்காசியாவில் தாய்வான் தங்குவா பா, வியட் நாமின் ஒகியோ ஆகிய துறைகளுடனும் வர்த்தக மார்க்கங்களால் தொடுக்கப்படிருந்தன.
மிகப் பழைய தெனிந்திய வணிக கணக்களில் ஒன்று மணிக்கிராமம்.இந்த வணிக கணத்தைப் பற்றி ஆவணங்கள் ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக தெனிந்தியா,இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.பத்தாம் நூற்றாண்டில் இலங்கையில் உள்ளூர்ப் பகுதியாகிய மகியங்கனைக்கு அருகாமையில் ஹோபிடிகம என்ற இடத்தில் மணிக்கிராமத்தவர் வர்த்தகம் நடத்தினர் என்பதற்க்குக் கல்வெட்டுச் சான்றுண்டு.இப்படியான உள்ளூர் வர்த்தக மையம் ஒன்றில் தம் முயற்சிகளில் ஈடுபட்ட மணிக்கிராமத்தவர் முதலில் கரையோர மையங்களாகிய திருகோணமலை, மாதோட்டம் போன்ற இடங்களில் தங்கள் நிலையங்களை நிறுவியிருப்பர்.
ஒன்பதாம் நூற்றாண்டில் மணிக்கிராமத்தவர் தாய்லாந்தின் தக்குவாபா என்னும் துறையில் பல வகைப்பட்ட முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு அவ்விடத்தில் கிடைத்த தமிழ் கல்வெட்டு ஒன்று சான்று பகருகின்றது.இதே நூற்றாண்டில் இவ் வணிகக்கணத்தினர் கேரளக் கரையோரத்திலும் பல முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அய்ந்தாம் நூற்றண்டுக்கும் ஏழாம் நூற்றண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சமஸ்கிரதக் கல்வெட்டுக்கள் பல இலங்கையிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன.இவை தென் பிராமி எனப்படும் எழுதிலும் அதன் வழியாக உருவாகிய பல்லவ - கிரந்தம் என்ற எழுதிலும் உள்ளன.இந்த எழுத்து முறமைகள் பல்லவர் ஆண்ட பகுதிகளில் சமஸ்கிருததை எழுதுவதற்க்குப் பயன்பட்டவை.ஆகவே இந்த எழுத்து முறைகளைக் கையாண்டு கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டமை பல்லவ பிரதேசத்தில் இருந்து வந்த சிற்பிகளும் பிராமணர்களும் வணிகர்களும் வெளி நாடுகளுக்குச் சென்று முயற்ச்சிகளில் ஈடுபட்டதற்க்குச் சான்றாகும்.பெரும்பாலும் இக் கல்வெட்டுகளுடன் சைவ வைணவ சிலைகளும் மற்றும் கோவில்களில் இடிபாடுகளும் கிடைதுள்ளமை இக் கருத்துக்கு வலுவூட்டுகிறது.
இப்படியான தொல்லியல் ஆதாரங்களுக்கு மிக முற்பட்ட ஒன்றாக லாவோஸ் நாட்டில் சம்பஸ்ஸக் என்னும் இடத்தில் கிடைத்த சான்றினைக் குறிப்பிடலாம்.சம்பஸ்ஸக் என்னும் நகரத்தில் உயரிய தூண் ஒன்றில் அய்ந்தாம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தென் பிராமி எழுத்தில் ஒரு சமஸ்கிரதக் கல்வெட்டு உள்ளது.சிவன்,விஸ்ணு,பிரம்மா ஆகிய தெய்வக்களுக்கு அமைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய கல்வெட்டாக அது இருந்தது.சம்பஸ்ஸக் நகரதுக்கு அருகாமையில் ஏழாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட வேறு இரு சமஸ்கிரதக் கல்வெட்டுக்கள் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டவையாக் கண்டு பிடிக்கப்படுள்ளன.லவோஸ் நாட்டுக்கு அருகில் உள்ள வியட் நாமில் பழைய பு-நான் அரசு இருந்த தென் பகுதியில் இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் ஒரு முக்கிய துறையாக விளங்கிய ஒக் இயோ என்ற இடத்தில் இன்னொரு சமஸ்கிரதக் கல்வெட்டு கிடைதுள்ளது.தென் பிராமி எழுத்தில் உள்ள இக் கல்வெட்டு வர்த்தமானர் என்ற தெய்வத்துக்குக் கட்டப்பட்ட ஒரு கோவில் பற்றிக் குறிப்பிடுகின்றது.இவை போல மேலும் பல கல்வெட்டுக்கள் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டவையாக தாய்லாந்திலும் மலேசியாவிலும் கிடைத்துள்ளன.
வங்காள விரிகுடாவைச் சுற்றி உள்ள நாடுகளில் தென்னிந்திய வணிக கணங்கள் பெருமளவு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்ட போது கூடவே பல்லவப் பேரரசின் பண்பாடும் பரவியது.அரசியலில் காணப்பட்ட செல்வாக்கைப் வெளிப்படுத்தும் ஒரு கூறாக மன்னர் பெயர்கள் பல அரசுகளில் பல்லவ மன்னர் பெயர்கள் போன்று வர்மன் என்ற இறுதிச் சொல்லைக் கொண்டிருந்தன.தெங்கிழக்காசிய அரசுகளில் இந்திரவர்மன்,ஜயவர்மன் ஈசானவர்மன் யசோவர்மன் பூர்ணவர்மன் போன்ற பெயர்கள் அய்ந்தாம் நூற்றாண்டில் பரவலாக வழங்கின.சமயத்தை பொறுத்த மட்டில் சைவ வைணவ மதங்களுடன் பவுத்த மதமும் பெருமளவில் செல்வாக்கைப் பெற்றிருந்தன.இலங்கையில் மணிக்கிராமம் மற்றும் நால்கு நாடு போன்ற வணிக கணங்கள் இச் செல்வாக்கைப் பரப்புவதில் முக்கிய பங்கு கொண்டிருந்தன எனலாம்.
தென்கிழக்காசிய அரசுகளில் ஆட்சியாளாராக இருந்தோர் மகயான பவுத்தையும் சைவ வைணவ மதங்களையும் ஆதரித்துப் பல்லவப் பேரரசிலிருந்து பரவிய செல்வாக்கு வளர்வதற்கு உதவினர்.


திராவிடக் கட்டிடக் கலையைக் காட்டும் ஜாவாவில் உள்ள தெற்காசியவிலையே பெரிய பண்டைய சைவக் கோவில் - பெரம்பான்
(Prambanan is the largest Hindu temple compound in Central Java in Indonesia, located approximately 18 km east of Yogyakarta.[1]
The temple is a UNESCO World Heritage Site and is one of the largest Hindu temples in south-east Asia. It is characterised by its tall and pointed architecture, typical of Hindu temple architecture, and by the 47m high central building inside a large complex of individual temples- wiki )
சோழரின் எழுச்சி
சோழர் ஆதிக்கத்தின் உச்ச கட்டம் ராஜராஜனின் மகன் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சியில் (1012-1044) அடையப்பட்டது.கடலிலும் தரையிலும் பெரும் படையெடுப்புக்களை நடத்தி,தெனிந்தியாவுக்கு வெளியேயியும் ராஜேந்திர சோழன் செல்வாக்குடன் விளங்கினான்.கிழக்குக் கரையோரமாகக் கங்கைக் கரை வரை படை கொண்டு சென்று வெற்றியுடன் திரும்பி,கங்கை கொண்ட சோழன் என்ற விருதைப் பெற்றான்.கடல் கடந்து வங்காள விரிகுடாவைச் சூழ விருந்த தென்கிழக்காசியத் துறைகள் பலவற்றைத் தாக்கி வேறோர் இந்திய அரச வம்சமும் பெற்றிராதா புகழைச் சோழ வம்சத்துக்குப் பெற்றுக் கொடுத்தான்.சீனா வரை தென்னிந்திய வணிகக் கணங்கள் தடையின்றி வர்த்தகம் நடத்த ராஜேந்திர சோழனுடைய படையெடுப்பு உதவியிருக்கலாம் என்பதில் ஐயமில்லை.
சோழராட்ச்சியின் போது அஞ்ஞாற்றுவர் என்னும் வணிகக் கணத்தினர் முக்கியமானவர்கள்.இவர்கள் தொடர்ந்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை செல்வாக்குப் பெற்றிருந்தனர்.பல இடங்களில் எறிவீர பட்டணம் என்ற நிறுவனங்களையும் வர்த்தக மையங்களையும் நிறுவினர்.


3 comments:
கடாரம் என்பது பர்மாவா?
கடாரம் பற்றி......
கடாரம் என்னும் நாடு தென்கிழக்காசியாவின் முதன்மையான நாடுகளில் ஒன்று. முதன் முதலில் தோன்றிய நாடுகளில் ஒன்று.
அந்த நாடு, தென் தாய்லந்திலிருந்து மலேசியாவின் வட பேராக் மாநிலம் வரைக்கும் பரவியிருந்தது.
கடலால் பாதுகக்காப்பட்ட அருமையான துறைமுகமும் கடற்படைத் தளமும் கொண்டதாக விளங்கியது.
வற்றாத ஜீவநதிகள் பல ஓடின. காட்டுவளமும் மலைவளமும் கடல்வளமும் ஆற்றுவளமும் நிலவளமும் கனிவளமும் நிறைந்த நாடு.
வெள்ளீயம், பொன் ஆகியவை ஏராளமாக அகப்பட்டன. ஒருவகையான முத்துவும் இங்கே ஒரு காலத்தில் கிடைத்தது.
இதனுடைய வளத்தின் காரணமாக உணவுப்பொருட்களை அது பலநாடுகளுக்கும் வழங்கியது. அத்துடன் கைவினைப்பொருட்களும் பலநாடுகளுக்கும் சென்றன.
தமிழகம், ஆந்திரம், கலிங்கம், வங்கம் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தது. அத்துடன் ஏனைய தென்கிழக்காசிய நாடுகள், காம்போஜம், சம்ப்பா, சீனம் ஆகியவற்றுடனும் ரோமாபுரி, அராபியா, எகிப்து,ஃபினீஷியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது.
பல கோயில்களும் பௌத்த விகாரைகளும் இருந்தன. பைரவ, பாசுபத சைவமும் சாக்தமும் தழைத்தன. அவற்றுடன் பௌத்தமும் செல்வாக்குடன் விளங்கியது.
ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் பாலி ஆகிய மொழிகளைல் பாண்டித்தியம் பெற கடாரத்துக்கு வருவார்கள்.
தமிழகத்தின் பாண்டியர்கள், பல்லவர்கள் சோழர்கள், வங்கத்தின் பாலர்கள், கலிங்கத்தின் கங்கர்கள் முதலிய அரசவம்சங்களுடன் கடாரத்தரசர்களுக்கு தொடர்புகள் இருந்தன.
பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழரின் படையெடுப்புக்கு ஆட்பட்ட நாடுகளில் இதுவும் ஒன்று. மீண்டும் இரண்டாம் ராஜேந்திர சோழரின் காலத்தில் ராஜேந்திரன் என்ற இயற்பெயர் பெற்ற முதலாம் குலோத்துங்க சோழரின் தலைமையில் கடாரத்தரசர்களிடையே சமரசம் நிலவும்வண்ணம் ஒரு கடற்படையெடுப்பும் நடந்தது.
ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாகக் கடாரம் என்னும் அந்த நாடு இருந்து, பின்னர் 'கெடா' என்னும் சுல்த்தானேட்டின் பகுதியாக மாறியது.
http://kadaaramnet.blogspot.com/
மேற்படி தகவல் மலேசியத் தமிழர்களுக்குப் பரிச்சயமானது.கெடா என்னும் மானிலம் இன்று மலேசியாவின் பகுதியாக உள்ளது.மலேசிய அரசால் இந்த வரலாறு அதிகம் சொல்லப்படாமலும் மறைக்கப்படும் வந்திருக்கிறது.
//நல்லுறவும் பகையுனர்வும்
தென்கிழக்காசியாவில் வணிகம் தழைத்தோங்கி இருந்த காலத்தில் தான் அங்கு ஆதிக்கம் செலுத்திய பெரிய அதிகார மையங்களுக்கு இடையிலான வர்த்தகப் பூசல்களின் விளைவாக அடிக்கடி போர்களும் மூண்டன. ஆரம்பகாலத் தென்கிழக்காசியாவில் படையெடுப்புகளும் ஊடுருவல்களும் மலிந்திருந்ததை வரலாறு காட்டுகிறது.
போரின் முக்கிய நோக்கம் பகைவர்களை அழிப்பதோ துரத்துவதோ அல்ல. மாறாக அவர்களை அடிபணியச் செய்து தங்கள் விசுவாசிகளாக்கிக் கொள்வதேயாகும். எனவே உள்ளூர் ஆட்சி மையங்கள் அழிக்கப்பட்டதில்லை என்றே சொல்லலாம். பெரிய, சிறிய ஆட்சி மையங்கள் இரண்டுமே ஒரே வகையான உட்கட்டமைப்பைக் கொண்டிருந்தன: அரசர் ஒரு குடும்பத் தலைவர் போன்றும் மக்கள் அவருடைய பிள்ளைகள் போன்றும் கருதப்பட்டனர்.
இந்தியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்குமான கடல்வழிகள்
தென்கிழக்காசியர்கள், இந்தியர்கள் உட்பட அராபியர்கள், பாரசீகர்கள், சீனர்கள், என பண்டைய உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த கடலோடிகள் கடல் வழிகளை கையாண்டு கடற்பயணம் மேற்கொண்டனர். கிபி 2ம் நூற்றாண்டுக்குள் பாய்மரக் கப்பல்கள் இந்துமா சமுத்திரத்தினூடாகப் பயணம் செய்ய முடிந்ததைச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. சில கடலோடிகள் தென்னிந்தியாவிலிருந்து சுவர்ணபூமிக்கு வங்காள விரிகுடாக் கடலோரமாகப் பயணம் செய்யாமல் இந்துமா சமுத்திரத்தை ஊடறுத்து நேர் பாதையில் சென்றனர். அந்தமானுக்கும் நிக்கோபார் தீவுகளுக்குமிடையிலான 10 டிகிரிக் கால்வாயை அவர்கள் பயன்படுத்தினர்.
கப்பல்கள் வங்காளத்திலுள்ள தாம்ரலிப்டி அல்லது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு மலாக்கா நீரிணையின் நுழைவாயிலுக்குச் சென்றன. அங்கிருந்து நேராகத் தாய்-மலாய்த் தீபகற்பம், சுமத்ரா அல்லது ஜாவாவிலுள்ளதுறைமுகங்களுக்குச் சென்றன. அவர்கள் மேலே தென்ச் சீனக் கடலில் பயணம் செய்ய விரும்பினால், தென்கிழக்குப் பருவக்காற்று வீசத் தொடங்குவதற்காக வார அல்லது மாதக் கணக்கில் துறைமுக நகரங்களில் காத்திருக்க வேண்டியிருந்தது. அதனால் இந்தப் பல்வேறு துறைமுக நகரங்களில் வெளிநாட்டவருக்கான குடியிருப்புப் பகுதிகள் உருவாகி மீண்டும் பயணம் செய்யச் சாதகமான காற்று வீசும்வரை அவர்கள் அங்கு காத்திருந்தனர். இந்தியாவிலிருந்து அப்பகுதிக்கு வந்து திரும்பிச் சென்று சேர குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாவது ஆயிற்று.
சோழர்களின் ஸ்ரீவிஜயா மீதான படையெடுப்பு
7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனக் கடலோரப் பகுதிகளிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்கள் தங்கிச் செல்வதற்கான முன்னணி இடைநிறுத்தத் துறைமுகமாக ஸ்ரீவிஜயா தலையெடுத்தது. பங்கா மற்றும் மலாக்கா நீரிணை வழியாக நடைபெறும் வணிகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரீவிஜய அரசர்கள் சோழர்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்தனர். எனினும், 11ம் நூற்றாண்டில் இரண்டு முறை பூசல் வெடித்தது. பொருளியல் போட்டிதான் அதற்குக் காரணமாக இருந்திருக்கக் கூடும்.
1025ல் ராஜேந்திரச்சோழன் ஸ்ரீவிஜய-கடார அரசின் மீது படையெடுத்தார். அப்போரில் கடாரத்தின் (கெடா) மன்னர் சங்கிரமவிஜயோத்துங்கவர்மன் சிறைப்பிடிக்கப்ப்பட்டார்.
படையெடுப்பின்போது ராஜேந்திரச்சோழன், ஸ்ரீவிசயம் (பாலெம்பாங்), பன்னை (வட சுமத்ரா), மலையூர் (ஜாம்பி), பின்னர் மாயிருடிங்கம், இலங்காசொகம் (லங்காசுக்கா), மாப்பாளம் (பெகு), மெவிலிம்பங்கம் (தாய்-மலாய்த் தீபகற்பத்தில்), வலைப்பந்தூறு (வியட்நாம்), தலைத்தக்கோளம் (தக்குவாப்பா), மாதமாலிங்கம் (தாம்ப்ரலிங்கா), இலாமுரிதேசம் (அச்சேயிலுள்ள லாம்ரி), மாநக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்), கடாரம் (கெடா) ஆகிய இடங்களை தாக்கியிருக்கிறார். எனினும் வெற்றியடைந்து தம் ஆற்றலை காட்டிய பிறகு ராஜேந்திரச் சோழன் ஸ்ரீவிஜயாவில் தம் ஆட்சியை நிறுவும் முயற்சியில் ஈடுபடாது படைகளுடன் திரும்பிச் சென்றுவிட்டார்.
கிபி 1030 முதல் 1064 வரை ஸ்ரீவிஜயாவில் என்ன நடந்தது என்பதை அறிய சான்றுகள் அதிகமில்லை.
கிபி 1068-69ல், ராஜேந்திரச் சோழரின் புதல்வன் வீரராஜேந்திரன், தம் உதவியையும் பாதுகாப்பையும் நாடி வந்த மன்னர் ஒருவருக்காக கடாரத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றித் தாம் வென்ற நாட்டை தன்னை நாடி வந்த அந்த மன்னருக்கு வழங்கினார்.
1089-90ல், சோழர்கள் ஸ்ரீவிஜய அரசுடன் மீண்டும் நட்புக் கொண்டிருந்தனர். 1006ல், கடார, ஸ்ரீவிஜய மன்னர்களின் வேண்டுகோளின் பேரில் தமிழ்நாட்டில் புத்தர் விகாரை ஒன்று கட்டப்பட்டது. அதன் பராமரிப்புக்காக ஆனைமங்கலம் என்ற ஊரை கடார, ஸ்ரீவிஜய மன்னருக்கு சோழர்கள் அளித்தனர். கடார மன்னர் சைலேந்திரர் அனுப்பிய இரு தூதர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டுமொரு முறை ஆனைமங்கலத்திற்கு சோழர்களால் வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.
கெமர்கள்
இன்றைய கம்போடியாவிலும் வியட்னாமிலும் இருந்த முன்னைய பூனான் அரசு சையாம் வளைகுடாவில் ஆதிக்கம் செலுத்தியது. அதன் துறைமுகங்கள் நிச்சயமாக இந்தியாவுடனான வணிகத்தில் பங்கு பெற்றிருந்திருக்கும். ஆகப் பழைய கெமர் அரசான பூனான், மீக்கோங் ஆற்றுக் கழிமுகத்தில் கிபி முதல் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாக சீன ஆதாரங்களும் தொல்லியல் சான்றுகளும் கூறுகின்றன. சீன நூல்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறப்படும் வெளிநாட்டவர் அந்த அரசின் வளர்ச்சியில் பங்காற்றியதாகக் கூறும் உள்ளூர்ப் பழங்கதை ஒன்றைச் சொல்கின்றன: அக்கதையின்படி, கெளடினியா என்ற பெயர் கொண்ட இந்திய பிராமண இளவரசர் ஒருவர், கடற்பயணம் செய்து பூனானுக்கு வந்து அங்குள்ள மக்களை அடக்கிய பிறகு உள்ளூர்த் தலைவி வில்லோ-லீப் என்பவரை மணம் புரிகிறார்.
மற்ற சீன நூல்கள் பூனானின் அரசவையில் பிராமணர்கள் எப்போதுமே செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறுகின்றன. பூனானின் இந்து அரசர்கள் விஷ்ணுவை வழிபட்டனர். எனினும் அவர்கள் பௌத்த சமயத்தையும் ஆதரித்தனர்.
கிபி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலிருந்து கெமர் ஆட்சி மையங்கள் படிப்படியாக உட்பகுதிக்கு நகர்ந்தன. கிபி 9ம் நூற்றாண்டுக்குள் கெமர்கள் அங்கோரில் குடியேறிவிட்டனர். அங்கோர் 15ம் நூற்றாண்டு வரை பேரரசின் தலைநகராக விளங்கியது. இன்று உலகின் ஆகப் பெரிய தொல்லியல் தலமாக விளங்கும் அது, தென்கிழக்காசியாவின் இந்தியமய அரசுகளின் மகத்தான சாதனைகளுக்குச் சான்று பகர்கிறது.
கெமர்களும் ராஜேந்திரச் சோழனும்
கெமர் மன்னர் முதலாம் உதயாதித்யவர்மன் கிபி 1001ல் அரியணை ஏறியதைத் தொடர்ந்து - குறைந்தது கிபி 1003 முதல் 1006 வரையாவது - அங்கோரில் ஆட்சி புரிந்த ஜெயவீரவர்மனுக்கும் கிழக்கே தன்னை நிலைநிறுத்திக்கொண்ட சூர்யவர்மனுக்கும் இடையே பகை மூண்டது. கிபி 1005க்கும் 1007க்கும் இடையே சூர்யவர்மன் மேற்கொண்ட பெரிய அளவிலான படையெடுப்பில் புனித இடங்கள் சேதமாயின.
9 ஆண்டுகள் நீடித்த போருக்குப் பின் கிபி 1011 வாக்கில் சூர்யவர்மன் அங்கோரில் முடிசூட்டிக் கொண்டான். அதனைத் தொடர்ந்து சூர்யவர்மன் வியட்னாமிய அரசவைக்குத் தன் முதல் தூதுக் குழுவை அனுப்பினான். வியட்னாமுக்கான பழைய வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது அந்த முதல் தூதுக் குழுவின் நோக்கங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். கிபி 1020க்குள், சூரியவர்மன் சோழர்களுடன் புதிய வணிக மற்றும் அரச உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டான்.
ராஜேந்திரச் சோழனின் நட்பைப் பெற்று அதன் மூலம் தன் அரசுக்கு ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொள்ளும் நோக்கில், பல போர்களில் தன் வெற்றிக்குத் துணையாக இருந்த தன்னுடைய ரதத்தை ராஜேந்திரச் சோழனுக்குப் பரிசாக சூரியவர்மன் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீவிஜயாவின் கேந்திர முக்கியத்துவமும் கலாச்சார உறவும்
பௌத்த பிக்குகள் இந்தியாவிலிருந்து ஸ்ரீவிஜயா வழியாகச் சீனாவுக்கு அடிக்கடி பயணம் செய்ததாகப் பதிவேடுகள் கூறுகின்றன. அது ஸ்ரீவிஜயாவில் பௌத்த சமயம் பரவியிருந்ததைக் காட்டுவதோடு மட்டுமின்றி சீனக் கடலோரப் பகுதிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் வழியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் ஸ்ரீவிஜயா இருந்ததையும் காட்டுகிறது.
ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இந்திய அரசுகளுக்கும் இடையே பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை இந்திய ஆதாரங்களில் அடிக்கடி காண முடிகிறது. நாலந்தா கல்வெட்டுகள், ஸ்ரீவிஜய மன்னர்களுக்கு பௌத்த பிக்குகளுடனும் வங்காளத்தின் பாலா மன்னர்களுடனும் அணுக்கமான உறவுகள் இருந்ததைத் தெரிவிக்கின்றன. நாலந்தாவின் மற்றொரு கல்வெட்டு, 9ம் நூற்றாண்டின் மத்தியில் ஆட்சி புரிந்த ஸ்ரீவிஜய மன்னன் பாலபுத்ரதேவா, நாலந்தாவில் பௌத்த மடம் ஒன்றை நிறுவ அனுமதி கோரி பாலா மன்னர் தேவபாலாவின் அரசவைக்குத் தூதர் ஒருவரை அனுப்பியதாகக் கூறுகிறது.
கிபி 1005ல் நாகபட்டினத்தில் பௌத்த விகாரை ஒன்று சூடாமணிவர்மன் என்ற ஸ்ரீவிஜய மன்னனால் கட்டப்பட்டது. அதற்கு சூடாமணிவர்ம விகாரை என அவருடைய பெயர் சூட்டப்பட்டது. அந்த விகாரை சூடாமணிவர்மனின் புதல்வரும் அவரை அடுத்து முடிசூடியவருமான மாறவிஜயதுங்கவர்மனால் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனைமங்கலச் செப்பேடுகள்
ஆனைமங்கலச் செப்பேடுகள் ராஜேந்திரச் சோழன் காலத்தவை. அவை தற்போது நெதர்லாந்திலுள்ள லேய்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ளன. பெரிய மற்றும் சிறிய லேய்டன் மானியங்கள் என்றும் அவை அழைக்கப்படுகின்றன.
இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 21 செப்பேடுகளைக் கொண்ட அந்தச் சாசனம் ராஜேந்திரச் சோழரின் அரச முத்திரை இடப்பட்ட வளையம் ஒன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. சாசனத்தின் ஒரு பகுதி சமஸ்கிருதத்திலும் எஞ்சியவை தமிழிலும் உள்ளன.
ஆனைமங்கலச் செப்பேடுகள் ராஜேந்திரச் சோழன் கிபி 1006ல் சூடாமணி விகாரையின் பராமரிப்புக்காக ஆனைமங்கலம் கிராமத்தைத் தானமாக வழங்கியதைக் குறிப்பதற்காகப் பொறிப்பிக்கப்பட்டது. ராஜேந்திரச் சோழர் ஸ்ரீவிஜய மன்னர் சூடாமணிவர்மனுக்கு நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரம் ஒன்றைக் கட்ட அனுமதி வழங்கியபோது அதன் பராமரிப்புக்காக ஆனைமங்கலம் கிராமத்தையும் தானமாக வழங்கினார். பின்னர் முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியின்போது அந்த மானியம் புதுப்பிக்கப்பட்டது.
ஜாவா, சுமத்ராவின் இந்தியமய அரசுகளான ஸ்ரீவிஜயாவும் மாத்தாரமும்
சுமத்ராவில் காணப்பட்ட கிபி 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல்லவ எழுத்து வடிவில் இருந்தாலும் அவற்றின் மொழி பழைய மலாய் மொழியே. பாலம்பாங்கைத் தலைநகராகக் கொண்ட ஸ்ரீவிஜய அரசு, பங்கா தீவு, லாம்புங் உள்ளிட்ட சுமத்ராவின் தென் பகுதி மற்றும் பாலெம்பாங்கின் வடக்கே உள்ள பகுதி ஆகியவற்றில் மேலாதிக்கம் செலுத்தியதாக அந்தக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஜாவாவை அடக்க ஸ்ரீவிஜயா மன்னர் கடற்படை ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்.
மத்திய ஜாவாவில் 8ம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த அரசு ஒன்று உருவானது. பின்னர் மாத்தாரம் அரசு எனப் பெயர்பெற்ற அதன் மன்னர்கள் சைலேந்திரர் (மலை அரசர்) என்னும் இந்தியப் பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டனர். அவர்கள் கட்டிய கோயில்களுள் போரோபுதூர் மிகவும் புகழ் பெற்றது. 9ம் நூற்றாண்டின் மத்தியில், சைலேந்திரர்களின் அரசு ஸ்ரீவிஜயா அரசைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வந்தது. மத்திய ஜாவா, பிரம்பானான் கோயிலைக் கட்டிய சஞ்சய அரசின் ஆட்சியின் கீழ்த் தொடர்ந்தது.//
னி முந்திரிகைக் கீழ் மூன்று மா முக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டு மாவினால் இறைக்கட்டின காணிக்கடன் நெல்லு எண்ணாயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து முக்கலனே இரு தூணிக் குறுணி ஒருநாழியும் கடாரத்தரையன் ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நாகப்பட்டனத்தெடுப்பிக்கின்ற சூளாமணி பன்ம விகாரத்துப் பள்ளிக்கு இருப்பதாக யாண்டு இருபத் தொன்றாவது முதல் பள்ளிச் சந்த இறையிலியாக வரியலிட்டுக் குடுக்க வென்று நாம் சொல்ல நம் ஓலை எழுதும் நித்தவிநோத வளநாட்டு ஆ வூர்க் கூற்றத்து விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தகரன் எழுதினாலும் நம் ஓலை நாயகன் உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தகச் சதுர்வ்வேதி மங்கலத்து கிருஷ்ணன் இராமனான மும்முடிச்சோழ பிரம்மமாகாராயனும் நித்த
http://exhibitions.nlb.gov.sg/kaalachakra/alliances_and_rivalries.htm
Copyright © 2008, National Library Board, Singapore
தென்கிழக்காசியாவின் தமிழ் கல்வெட்டுகள்
தென்கிழக்காசியாவுடனான தென்னிந்தியாவின் வணிகத் தொடர்புகள் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் சீனாவின் கடலோரப் பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு தமிழ் கல்வெட்டுகளில் பிரதிபலிக்கின்றன. இந்தக் காட்சிக் கூடத்தில் அத்தகைய 8 கல்வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தித் தமிழில் வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் ஒன்று மியன்மாரையும் இரண்டு தாய்லாந்துத் தீபகற்பத்தையும் நான்கு சுமத்ராவையும் ஒன்று சீனாவின் மத்தியக் கடலோரப் பகுதியையும் சேர்ந்தவை. 9ம் மற்றும் அதற்குப் பிந்திய நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் வணிகச் சமூகங்களின் நடவடிக்கைகள் பற்றிக் கூறுகின்றன.
தமிழ் வணிகச் சமூகங்கள், தென்னிந்தியாவைத் தளமாகக் கொண்ட குழுக்களையும், வர்த்தக நிறுவனங்களையும் அமைத்துக் கொண்டு செயற்பட்டன. இக்குழுக்கள் மணிகிராமம், ஐந்நூற்றுவர், நானாதிசை என்பன போன்ற பெயர்களைக் கொண்டிருந்தன. உள்ளூர் ஆட்சியாளர்கள் எழுதிய கல்வெட்டுகளுக்கு (காட்சிக் கூடம் 1லும் 2லும் காணப்படுவன) மாறாக, இந்தத் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளூர்த் தமிழ் வணிகர் சமூகத்தின் பொருளியல் மற்றும் சமூக வாழ்க்கையைப் பற்றி மட்டுமே பேசுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தமிழ் வணிகச் சமூகங்கள் தனிச்சுதந்திரத்தை அனுபவித்து வந்ததையும் இந்தக் கல்வெட்டு வாசகங்கள் உணர்த்துகின்றன. தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள சொந்தப் படைகளை வைத்துக்கொள்வதற்கான அனுமதியும் அவர்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது. தமிழ் வணிகர்களின் நடவடிக்கைகளுக்குச் சான்றுகள் கிடைத்த பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது: மேடானுக்கு அருகே உள்ள கோத்தா சீனா, சுமத்ராவின் வடமேற்குக் கடற்கரையில் உள்ள பாருஸ், தாய்-மலாய்த் தீபகற்பத்தில் தக்குவாப்பாவுக்கு அருகே உள்ள கோ கோர் காவ் ஆகியவை அந்த இடங்கள். கள ஆராய்ச்சி, கல்வெட்டுகள் வழங்கிய சான்றுகளை உறுதிப்படுத்தியுள்ளன.
குறிப்பு: இந்தக் காட்சிக் கூடத்திலுள்ள மொழிபெயர்ப்புகள் அனைத்தும் இந்தியாவின் பாண்டிச்சேரி பிரெஞ்சு கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஒய் சுப்பராயலுவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
'Lobo Tuwa' Tamil inscription
Period: 11th Century CE
Script: Tamil-Grantha
Language: Tamil
Found in: Lubo Tuwa, Sumatra, Indonesia.
Material: Stone
Present Location / Lender Museum Nasional Indonesia, Jakarta, Indonesia
This Tamil inscription was found at the early port site of Lobo Tuwa near Barus (Baros) of northwestern Sumatra.
The date of the text falls within the reign of Kulottunga Chola of Tamilnadu. It is dated 1088 CE.
Translation of the available Text portion:
In the Saka year 1010 current, month Masi, we, the Five Hundred of the Thousand Directions, having met at the Velapuram in Varosu (Barus), also called ‘the pattinam (commercial town) for the welfare of the merchant body blessed by Matankari (Durga)’, decided to grant as follows to ‘our sons’, the nagara-senapati Nattu-cettiyar, to Patinen-bumi-desi-appar(?), and to the mavettugal (elephant-trainers?): [On each of the] ships’ [cargoes?], the ship’s captain and crew will pay the fee anjutundayam in gold, pegged to the price of kasturi (musk), and [then only] may ‘step on the cloth spread’ (ie. enter the settlement to trade). Thus we, the Five Hundred of the Thousand Directions, known in every direction in all Eighteen Lands, had the stone inscribed and planted. Do not forget charity; charity alone will help you.
Text in modern Tamil characters:
Text in modern Tamil characters:
1 ஸ்வஸ்தி ஸ்ரீ சகரை
2 ஆண்டு ஆயிரத்து[ப்ப]
3 த்துச் செல்லாநி[ன்]
4 ற மாசித் திங்கள்
5 வாரோசாந மாதங்
6 கரி வல்லவத் தேசிஉ
7 ய்யக் கொண்ட பட்
8 டி நத்து வேளாபுரத்து
9 கூடி நிரந்த தே[சித் திசை]
10 விளங்கு திசை ஆயி
11 த்தைஞ்ஞூற்றுவரோ
12 ம் நம்மகநார் நகர ஸேநாப
13 தி நாட்டுசெட்டி
14 யார்க்கும் பதிநெண்பூமி
15 தேசி அப்பர்க்கு மா[வெ]த்
16 துகளுக்கும் நா வைத்துக்
17 குடுத்த பரிசாவது மரக்க
18 ல... ... ...
19 ல மரக்கல நாயநுங் கேவி
20 களும் கஸ்தூ[ரி] விலை மு[தல]கப்ப[ட]
21 அஞ்சு துண்[டா]யம் பொன்னும் கு[டு]
22 த்துப் பாவாடை ஏறக்கடவதாகவும்
23 இப்படிக்கு [இ]க்கல் எழுதி நாட்டி
24 க் குடுத்தோம் பதிநெண்பூமி தேசித் திசை விள
25 ங்கு திசை ஆயிரத்தைந்த்நூற்றுவரோம் அ
26 றமற வெற்க அறமேய் துணை.
Modern Tamil translation:
நிகழும் சக வருடம் ௧0௧0 மாசி மாதம்..,
நாங்கள் ஆயிரம் திசை ஐந்நூற்றுவர் மாதங்கிரி வல்லவ தேசி உய்யக் கொண்ட பட்டினம் எனப்படும் வாரோச்சிலுள்ள வேளாபுரத்தில் சந்தித்து, எங்கள் பிள்ளைகளான நகர சேனாபதி நாட்டுச் செட்டியார் பதிநெண்பூமி தேசி அப்பர் மட்டும் மாவெட்டுகள்
(ஒவ்வொரு) கப்பலுடைய தலைவனும், கேவிகளும், அஞ்சு துண்டையம் தங்கம் அந்த கஸ்தூரி முதலானவைக்கு செலுத்திவிட்ட பிறகுதான், கீழே இறங்கவேண்டும்.
http://exhibitions.nlb.gov.sg/kaalachakra/tamil_Inscriptions_in_Southeast_Asia.htm
Post a Comment