சரவணன்,
சரி உங்கள் விளக்கத்தின் படியே பின் நவீனத்துவத்தை தத்துவம் என்றே எடுத்துக் கொள்வோம்.தத்துவம் என்றால் என்ன என்பதை வரயறை செய்வோம்.
// phi·los·o·phy - the rational investigation of the truths and principles of being, knowledge, or conduct. //
http://dictionary.reference.com/browse/philosophy
தத்துவம் என்பது உண்மைகளைக் கண்டறிவதற்கான அறிவார்ந்தமான தர்கவியல் விசாரணைகளின் தொகுப்போ அன்றில் அதன் பாற்பட்ட முறைமைகளோ ஆகும்.
முதலில் பின் நவீனத்துவம் உண்மை என்பதை மறுக்கிறது.உண்மைகளை நோக்கிய தத்துவ விசாரணைகளையே அது மறுக்கிறது.தத்துவ விசாரணை என்பதே ஆசிரியனின் கதையாடால் என்கிறது.அவை அந்த ஆசிரியனுக்கே உரித்தான உண்மைகள் என்கிறது.பல ஆசிரியர்களும் பல உண்மைகளும் இருக்கமுடியும் என்பதன் மூலம் தத்துவ விசாரணைகளுக்கு அடிப்படையாக அமையும் உண்மை,பொய்மை என்னும் இரு கூற்றி நிலைப்பட்டை மறுக்கிறது.மேலும் தர்க்கம் என்பதே சொல் விளையாட்டு அல்லது சொல்லாடால் என்கிறது.கட்டுடைத்தல் என்பது பின் நவீனத்துவம் சொல்ல விழைகின்ற அல்லது அது நிறுவ முயல்கின்ற தர்க்கத்தின் மீதும் பிரயோகிக்கப்படும் போது அங்கே பின் நவீனத்துவம் என்னும் தர்க்கமே வெறும் சொல்லாடலாக கட்டுடைகிறது.
To put it simly if every narrative is a construction of the author, the narrative of the post modernist it self is a consturction of the narrator and hence has to be de constructed.what you are left with is nothing.
//புரிந்துகொண்டால்தான் மாற்ற முடியும் என்பது என் கருத்து.//
பின் நவீனத்துவம் எவ்வகையாக இதனைச் சாதிக்கமுடியும் என்று சொல்கிறது?அதற்கான வழிவகைகள் என்ன என்ன?
//இவற்றைக் கொண்டாடுவதன் மூலம் விளிம்பு நிலை மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது//
மீண்டும் மீண்டும் வெறும் வார்த்தைப் பிரயோகங்களே.விளிம்பு நிலை என்பதை ஏன் கொண்டாட வேண்டும்? இவர்களுக்கு விளிம்பு நிலை என்னும் அங்கீகாரத்தை வழங்குவதன் மூலம் பின் நவீன்த்துவம் இவர்களை விளிம்பு நிலையிலையே வைத்திருக்க முற்படுகிறது.இவர்களின் நிலையை மாற்றுவதற்கான என்ன வழிவகையை பின் நவீனத்துவம் வழங்குகிறது?
ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேண்டியது இவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்ங்கிற முத்திரை அல்ல.அவர்களுக்கு வேண்டியது தமது நிலையை மாற்றுவதற்கான அதிகாரமே.
//மாறாக, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது என்கிறது//
மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும், ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை.பின் நவீனத்துவம் என்னும் பேய்க்காட்டல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.ஏனெனில் மனித வாழ்க்கை என்பது பொருளாதாரா ஏற்றத் தாழ்வுகளாலும் அதன் பாற்பட்ட சமூக உறவு நிலைகளாலும் நிர்ணயிக்கப்படும் வரை இவற்றின் பாற்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.வரலாற்று இயங்கியல் அதனைத் தான் சொல்கிறது.
//தொழிலளி சார்பாக என்று கூறி ஒரு முற்போக்குக் கவிஞர் எழுதிய கவிதை எப்படித் தொழிலாளிமேல் அதிகாரம் செலுத்தி அவனை வாயில்லாப் பூச்சி ஆக்குகிறது என்பது கட்டுடைத்தல் மூலம் வெளிப்படுவதை தமிழ்வனின் 'தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும்' புத்தகத்கில் காண்க.//
இதையே நான் இவ்வாறு மாற்றி எழுதலாம்.
தலித்தின் சார்பாக என்று கூறி ஒரு பின் நவீனத்துவக் கவிஞர் எழுதிய கவிதை எப்படித் தலித்தின் மேல் அதிகாரம் செலுத்தி அவனை வாயில்லாப் பூச்சி ஆக்குகிறது என்பது கட்டுடைத்தல் மூலம் வெளிப்படுவதை பேராசிரியர் உம்பரோ குஜேயின் 'தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும்' புத்தகத்கில் காண்க.
//ஆமாம். Act locally என்று சொல்வதுபோல உங்கள் சூழ்நிலைக்கான கொள்கையை நீங்களே தேர்ந்து கொள்ள வேண்டும். சகல உலக மக்களுக்கும், சகல காலத்திலும் பயன் தரும் கோட்பாடோ, கொள்கையோ இல்லை என்கிறது.//
அய்யா அப்படியாயின் எமக்கு ஏன் வேண்டும் இந்தப் பின் நவீனத்துவம் அது ஒன்றையுமே சொல்ல வில்லை நீயாக தெரிந்து எடுத்துக்கொள் எங்கிறது எங்கிறீர்கள்.ஆனால் அது உலகைப் புரிந்துகொள்வதற்கான தத்துவம் எங்கிறீர்கள்.அங்கே தத்துவம் என்று சொல்ல அதில் என்ன இருக்கிறது?
//
ஒரு குறிப்பிட்ட புத்தகம் காலாகாலத்துக்கும் செல்லுபடியாகும் என்று மதங்களைப் போல, மார்க்ஸியம் போல பின்நவீனத்துவம் கூறாததால் அது என்றும் உயிர் வாழும்.//
ஆமாம் அது ஒன்றையுமே கூறாமல் எல்லாவர்றையும் கூறுவதாக என்னன்று அய்யா கற்பனை செய்து கொள்கிறீர்கள்?பின் நவீனத்துவம் என்பது என்றோ மேற்குலகில் செத்து ஒழிந்து விட்டது.அது என்றும் உயிர் வாழும் என்று எப்படி அய்யா ஆரூடம் கூறுகிறீர்கள்?
நான் மேற் சொன்னவை மேற்குலகில் பின் நவீனத்துவத்திற்க்கு எதிராக கேட்க்கப் பட்ட கேள்விகள்,அதற்கு பதில் அழிக்க முடியாமால் தான் அங்கு அது செத்து ஒழிந்து விட்டது.
அற்புதன் said...
மல்லி,
உங்கள் கட்டுரையில் இருக்கும் முரண்பாடுகளைப் பாருங்கள்.
//ஆக, பின்நவீனத்துவம் நம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி மற்றும் எதிர்வினை என்று கூறலாம்//
//வரலாற்று ரீதியாக, இரண்டாம் உலகப் போருக்குப்பின் பழைய கொள்கைகளின் போதாமையால் ஏற்பட்டதே பின்நவீனத்துவம் என்ற தத்துவம். //
பின் நவீனத்துவம் என்பது ஒரு தத்துவமா? அப்படியாயின் அது எதைச் சொல்கிறது?
மேலே அது ஒரு புரிதல் முறை என்று சொல்லி இருகிறீர்கள்?
இந்த உலகத்தைப் புரிந்து கொள்வதற்க்கு அது உதவி செய்வதால் என்ன பலன்?
//பின்நவீனத்துவத்தின் குறிப்பிடத்தக்க பண்பு அது மனிதர்களிடையே காணப்படும் சகல வேறுபாடுகளையும் அங்கீகரிப்பது, ஏன், கொண்டாடுவது.//
உயர்வும் தாழ்வும் இருப்பதுவும் வேறுபாடுகள் இருப்பதுவும் உலகில் நிதர்சனமான உண்மைகள் என்பதன் மூலம் அது எதனைச் சொல்ல வருகிறது எதனைச் சாதிக்கிறது?
உலகம் மாற்றம் பெற வேண்டும் என்று சொல்லாமால் இருப்பதன் மூலம் அது இருக்கின்ற வேறுபாடுகளைப் பாதுகாக்கிறது.அதனாலையே அது மத வாதிகளாலும்,ஏகாதிபதியங்களாலும் மறைமுகமாக வளர்த்து எடுக்கப்படுகிறது.
//அதேவேளை எந்தக் கதை/கட்டுரை/கவிதை/சினிமா/நாடகம் ஆகியவற்றினூடாகச் செயல்படும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துகிறது.
//
பின் நவீனத்துவ அரசியலே ஏன் கதை,கட்டுரை,கவிதை என்பனவற்றினூடாகச் செயற்படுகிறது?
சிறு கதையாடல் என்பது தானே தமிழில் பின் நவீனத்துவர்கள் என்று உளறிக் கொட்டுபவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஒரு சொல்லாக இருக்கின்றது.
//பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சம், அது எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கையோ, கோட்பாடோ, சூத்திரமோ உலகைப் புரிந்துகொள்ள உதவும் என்பதை நிராகரிக்கிறது//
//ஆக, பின்நவீனத்துவம் நம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சி மற்றும் எதிர்வினை என்று கூறலாம்//
ஆகவே பின் நவீனத்துவம் என்பதே உலகைப் புரிந்து கொள்ள உதவாது.
அது தன்னையே இதன் மூலம் நிராகரிக்கிறது.தன்னையே நிராகரிக்கும் ஒரு தர்க்கத்தையே பின் நவீனத்துவம் முன் வைக்கிறது.அதாவது நான் சொல்வதெல்லாம் பொய் ஆகவே என்னை நம்பாதீர்கள் என்று சொல்கிறது.ஆகவே அதன் தர்க்கத்தின் படியே பின் நவீனத்துவத்தை நாம் நிராகரிக்கலாம்.
தொடர்பானா பதிவு இங்கே.
Sunday, 16 March 2008
Subscribe to:
Post Comments (Atom)


4 comments:
வணக்கம் தோழர் அற்புதன்
உங்கள் வாதத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் நீங்கள் கூறும் கவிதை பின்நவீனத்துவம் பார்வை தற்போது கலவியல் குறித்த வாழ்க்கை முறையிலேயே அதிதீவிரமாக இருக்கின்றதே ஒழிய வாழ்க்கையில் வேறு எந்த புண்ணாக்குக்கும் உதவுவதில்லை. தன்கையே தனக்குதவி என்ற பரபரப்பான வாழ்வியல் முறையில் எந்த போட்பாடுகளையும், எந்த நவீனத்துவத்தையும் பேச முடிவதில்லை. பேசினாலும் வேலைக்காகாது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேண்டியது இவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்ங்கிற முத்திரை அல்ல.அவர்களுக்கு வேண்டியது தமது நிலையை மாற்றுவதற்கான அதிகாரமே
///தன்கையே தனக்குதவி என்ற பரபரப்பான வாழ்வியல் முறையில் எந்த போட்பாடுகளையும், எந்த நவீனத்துவத்தையும் பேச முடிவதில்லை. பேசினாலும் வேலைக்காகாது.///
இதைத்தான் பின்நவீனத்துவம் சொல்கிறது தமிழச்சி அவர்களே!
/// சரவணன் said...
தன்கையே தனக்குதவி என்ற பரபரப்பான வாழ்வியல் முறையில் எந்த போட்பாடுகளையும், எந்த நவீனத்துவத்தையும் பேச முடிவதில்லை. பேசினாலும் வேலைக்காகாது.///
இதைத்தான் பின்நவீனத்துவம் சொல்கிறது தமிழச்சி அவர்களே!
தோழர் சரவனுக்கு பொருளாதாரம் தவீர்த்து கலவியல் ரீதியில் உங்கள் பின்நவீனத்தும் என்ன கோட்பாடுகளை சொல்கிறது என்று விளக்க முடியுமா?
Post a Comment