Saturday, 1 March 2008

சிறிலங்கா இராணுவத் தளபதி டில்லியில் ஆலோசனை, 25 தமிழக மீனவர் கைது, தன்மானத் திராவிடர் ஆழ்ந்த உறக்கம்.

சிறிலங்கா இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு இல்லை எனில்

ஏன் இந்திய மத்திய அரசு தொடர்ந்து இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது?

இந்திய ஆளும் வர்க்கம் கடந்த காலங்களில் இருந்து இன்னும் படிப்பினைகளைப் பெற வில்லையா?

25 தமிழக மீனவர்கள் சுண்டைக்காய் கடற்படையால் கைது.

டெல்லி சாணாக்கியரிடம் மூக்கில் விரலை வைத்து விளையாடுகிறது சிறிலங்கா, சிரிப்பாக இருக்கிறது. நாராயண சாமிகளிடம் இந்தியப் பாதுகாப்பு இருக்கும் வரை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இருக்கப் போவதில்லை.


உறங்கும் தன்மானத் திராவிடக் குஞ்சுகளே எப்போது விழிப்பீர்?

தானைத் தலைவர் இனி என்ன என்று மடல் எழுதுவார் ?



சரத் பொன்சேகா இந்தியாவுக்கு அவசர விஜயம்.

01.03.2008 / நிருபர் சங்கிலியன்

சிறிலங்காப் படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவசர விஜயமாக நாளை இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா இந்திய இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி மிக உயர்மட்ட இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் சந்தித்துப் பேசுவார் என்றும் அதனைத் தொடர்ந்து முக்கிய விடயங்கள் குறித்து பல தரப்பினருடனும் கலந்துரையாடி இந்தியாவின் இராணுவ உதவியையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை ஆராய்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவரின் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவில்லை.

புதுடில்லியிலுள்ள ""இன்டியா கேற்'' வளாகத்தில் படைவீரர் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார். அதன் பின்னர் அவருக்கு இந்திய இராணுவத்தின் கேந்திர மையங்களில் ஒன்றான, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான ""சவுத் புளொக்'' இல் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும் என்றும் அவ் இணையத்தள செய்தி தெரிவிக்கிறது.

நன்றி:சங்கதி இணையத் தளம்.


25 தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் கைது- 21 சிங்கள மீனவர்கள் இந்திய கடற்படையால் சிறைப்பிடிப்பு


[சனிக்கிழமை, 01 மார்ச் 2008, 07:55 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]


சிறிலங்கா கடற்படையினரால் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை இந்திய கடலோர காவல் படையினரால் 21 சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
தமிழகம் குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 22 ஆம் நாள் 25 தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கப் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் கடந்த மாதம் 27 ஆம் நாள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை கரை திரும்பாததால் கலவரமடைந்த உறவினர்கள் தேடுதலில் இறங்கிய போது, 25 தமிழக மீனவர்களையும் சிறிலங்கா கடற்படையினர் கைது செய்திருப்பது தெரிய வந்தது.
இதனால், நேற்று வெள்ளிக்கிழமை மீன் பிடிக் கிராமங்களில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உறவினர்கள் இது குறித்து மீன்பிடித்துறை அமைச்சிடமும் கடலோர காவல் படையினரிடமும் முறைப்பாடு செய்தனர். தற்போது சிறிலங்கா கடற்படையிரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியாளர் சோதி நிர்மலா தெரிவித்துள்ளார்.இதேவேளை, கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் அவர்களின் விசைப்படகுகளும் நீர்கொழும்பு என்ற இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நாகர்கோவில் மீன்பிடித்துறை உதவி இயக்குநர் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதேநேரம், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 21 சிங்கள மீனவர்களை இந்திய கடலோர கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் மற்றும் நாகை கடல் பகுதியில் நான்கு மீன் பிடிப் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீது சந்தேகமடைந்த கடலோரக் காவல் படையினர் அவர்களின் படகுகளை சுற்றிவளைத்தனர்.
படகுகளுக்குள் இருந்தவர்களை ஒவ்வொருவராக வெளியே வருமாறு அழைத்த போது, அவர்கள் தாம் சிங்கள மீனவர்கள் எனவும் தங்களை எதுவும் செய்ய வேண்டாம் எனவும் கூறிய படி ஒவ்வொருவராக வெளியே வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன.


நேற்று முன்நாள் கைது செய்யப்பட்ட 21 சிங்கள மீனவர்கள் தொடர்பாகவும் சிறிலங்கா தூதரகத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை அதிகாரி சிறீகாந்த் தெரிவித்தார்.


ஆதாரம்: தினக்குரல்படம்: தினத்தந்தி

நன்றி புதினம்.

1 comments:

ஜோதிபாரதி said...

மிகவும் வேதனையானச் செய்தி

தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இன்னும் மத்திய அரசை ஆதரிப்பது ஏனோ? பதவி ஆசையா? ஆம்! ஆம்!!
உங்களைப்பற்றி புரிந்து கொண்டோம். இனியும் நான் தமிழினத் தலைவர் என்று சொல்லி எங்கள்(தமிழக மக்களின்) ஓட்டை நீங்கள் வாங்க முடியாது. இந்த தடவையோடு ஒளி(ழி)ந்து போங்க.

வேதனையுடன்,
ஜோதிபாரதி.