மொழிவிளையாட்டு
தலித்திய பின்நவீனத்துவ பெண்ணியக் கொந்தராத்துக் காரரான
சோபாசக்தி அவர்கட்கும், சோபாசக்திகளுக்கும்.
கனம் பொருந்திய ஐயா!
நீண்டகால அவதானிப்பின் பின், தங்களின் வேளாள தலித்திய, பின்நவீனத்துவ, பெண்ணிய கொந்துராத்து சவடால்த் தளத்தை ஆராய்ந்து பார்த்ததில் ஏற்பட்ட தாங்கொணா வலியிது. புலுடா, பம்மாத்து, பாவ்லா, நேர்மையின்மையின் தொடர்ச்சியாக தங்களின் சவடால் வழிமொழி, மொழிவழிகள் தொடர்பாகவும், வேளாளத் தலித்தியக்க சேவைகள் தொடர்பாகவும் எனது கருத்தையும் விமர்சனத்தையும் முன்வைக்கிறேன்.
முதற்கண் தங்களிடம் ஒரு கேள்வி ஐயா!
தலித்தியக்கத்தையும் தலித் இலக்கியத்தையும் யார் தங்களுக்கு குத்தகைக்கு விட்டது? இதுவரை காணும் தலித்துக்கள் யாரும் தங்களை குத்தகைக்கு விட்டதாக நாங்கள் அறியவில்லை. பின் எப்படி குத்தகைக்கு பெற்றுக்கொண்டீர்கள்? தங்களின் கருத்துக்கள் பிரச்சாரங்களுக்கு விமரிசனம் செய்வதையிட்டு மிகவும் வருந்துகிறேன். எனது ஐந்து மாதக் குழந்தையுடன் முட்டு முட்டு முட்டு முட்டு விளையாடும் நேரத்தை கட்பண்ணி தங்களுக்கு விமர்சனம் எழுதுவதற்காக.
தங்களின் முன்னோர்கள் செய்தது போல, தலித்துக்களின் மொழி இழிசனர் மொழி, புனாசூனா மொழி என மறைமுகமாக மீண்டும் அடித்துக் கூறும் தாங்களும், தங்களின் வழிமொழி வந்தவர்களும்; என்ன அரசியல்; யாருக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று நாங்கள் அறிவோம் ஐயா! தலித்துக்கள் புனாச்சூனா மொழிகளில் மட்டுமல்ல ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு, டொச்சு, பாலி, இந்தி, சிந்திரோமா மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். விசேடமாக சைவ வேளாள மொழியை வாழ்பனுபவங்கள் ஊடாக கற்றுத் தேர்ந்தவர்கள். தாங்கள் நிறுவ முயல்கின்ற மொழி தலித் மொழியல்ல, மாறாக வேளாளவியத் தலித் பாவலா மொழி என தலித்துக்களால் உணரப்படுகிறது. தங்கள் மொழி பட்டுக்கோட்டையின் மொழியோ, பாவலரின் மொழியோ அல்ல. நாவலரின் மொழி என்றும் நாமறிவோம்.
‘மொழியின் தளத்தில் மையத்தில் இருந்து அந்த மொழியின் சகல ஆற்றல் வழியாகவும் இலக்கணம், இலக்கியம் சிந்தனை மரபு முதலியவற்றின் தளத்தில் தங்கள் வல்லாண்மையை அதிகாரத்தை சாதித்துக்கொண்ட நிலைநிறுத்திக் கொண்ட இந்த உயர்ந்தோர் யார்?’ (நன்றி: தி.சு.நடராஜன்)
இந்த உயர்ந்தோர் யார்? யார் வழிமொழி, யார் மொழிவழி வந்தவர்கள் என்று தாங்கள் அறிவீர்கள். தலித்துக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிச்சாக, நீங்கள் உங்களை தலித்துகளாக பீல் பண்ணுவதும், பீலிங் அரசியல் நடத்துவதும் கண்டிக்கத்தக்கது. நாங்கள் எங்களை தலித்துக்களாக பீல் பண்ணவில்லை. தலித்துக்களாகவே பிறந்தோம். தலித்துக்களாகவே வாழ்கிறோம்.
ஒவ்வொரு நாளிலும் பொழுதிலும்
ஒவ்வொரு பகலிலும் இரவிலும்
ஒவ்வொரு படைப்பிலும் எழுத்திலும்
ஒவ்வொரு மூச்சிலும் கணத்திலும்
ஒவ்வொரு திசைகளிலும் கண்டங்களிலும்
நாங்கள் தலித்துக்களாகவே வாழ்கிறோம்.
உங்கள் அரசியலிலும் விடுதலை இயக்கங்களிலும்
உங்கள் எழுத்திலும் படைப்பிலும் மொழியிலும்
உங்கள் பார்வைகளிலும் அசைவுகளிலும்
உங்கள் நக்கல்களிலும் நளினங்களிலும்
உங்கள் மனங்களிலும் நினைவுகளிலும்
நாங்கள் சக்கிலியப்-பறையராயும் வண்ணாரம்-பட்டராயும் நளவர்-பள்ளராயுமே இருக்கிறோம்.
அம்பேத்காரையும், பெரியாரையும் உச்சரித்துக் கொண்டு டானியலையும், டொமினிக் ஜீவாவையும், வசதியான வேளையில் துணைக்கு அழைப்பது குறித்து நாம் அவதானமாகவே உள்ளோம். தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கலகக்குரல் சவடால் கருத்துக்களை மட்டும் தனியே பொறுக்கி எடுத்து, செய்யும் வேளாளத் தலித் அரசியல் குறித்தும் நாம் கவனமாகவே உள்ளோம். இது குளோபலைசேசன் காலமையா! பரிசிலிருந்து தமிழ்நாட்டை ஆட்டுவித்தாலென்ன, தமிழ்நாட்டிலிருந்து பரிசை ஆட்டுவித்தாலென்ன ஆடாமலா போகும்? குளோபலைசேசன் குறித்து தாங்களும், சகபாடிகளும் அசட்டை செய்வது அல்லது அறியாமலிருப்பது just f..k yourself.
கைலாசபதிகளும், சிவத்தம்பிகளும் செங்கோல் செலுத்தி ஆண்ட காலத்தில், டானியல், டொமினிக்ஜீவா, எஸ்பொ, என்.கே ரகுநாதன்,தெணியான், பசுபதி எப்படி நசுக்கப்பட்டார்கள் என்ற வரலாறு அறிவோம். பின் சிவத்தம்பிகளின் இன்றைய ஆட்சிக் காலத்திலே, நடந்தேறிய தமிழினி 2000தை சேரனவர்களும் சேர்ந்து இயக்கினார். புகழ்பெற்றார். என்பது பலர் அறிந்த செய்தி. அதே நேரம் தோழர் டொமினிக் ஜீவாவும் ஒரு மூலையில் அமர்ந்து அவதானித்து, அவதானித்துச் சென்றார் என்பது வரலாறு.
பரிசில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பின் பின், புஸ்பராஐh போன்ற தலித்துக்களை ஓரங்கட்டிவிட்டு சிவகாமியை மைய்யமிட்டு நடைபெற்ற தலித் கருத் அரங்கும் ஒரு வரலாறு. சனதருமபோதினியில் எஸ் பொவுடனான தங்களின் சதிகாரப் பேட்டியில் எஸ் பொவின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை விட தங்களின் உள்நோக்கத்தை தெளிவாக பார்க்க முடிந்தது. தலித்துக்களை மிஞ்சிய தலித், அல்லது தலித்துக்களுக்கு எல்லாம் தலைத் தலித் என்பதுதானே அது?
பகிடி விடாதேயுங்கோ ஜயா! அந்தாளுக்கு தலைதெறிச்சுப் போட்டுதெண்டு எங்களுக்குத் தெரியும். அவற்றை தமிழ்தேசியத்தை கொண்டுபோய் குப்பையிலை போடுங்கோ. அவருக்காக நாங்கள் காவடி எடுக்கேல்லை. உங்களையும் எடுக்கச் சொல்லேல்ல. அவருக்குத் தலைதெறிச்சுப் போட்டுதெண்டதை துருப்புச்சீட்டா வைச்சு எங்களுக்கு தலித்பூ சுத்த வேண்டாம்.
கைலாசபதிகளையும், சிவத்தம்பிகளையும் நீங்கள் குத்தி முறியும் அரசியல் வேறு, நாங்கள் அவர்கனை விமர்சிக்கும் நோக்குநிலை வேறு. ஒரு பக்கத்தில் கைலாசபதி சிவத்தம்பிகளை குத்தி முறிந்து கொண்டு அவர்களை பாதுகாக்கும் கைங்கரியம் நடக்கிறது. மறுபக்கம் தலித்துக்களை மேய்க்கும் கைங்கரியம் நடக்கிறது. இஞ்ச வா சோபாசக்தி என்று, எஸ் பொ தங்களை இழுத்து வைத்து விடிய விடிய கைலாசபதி சிவத்தம்பிகளைப் பற்றி கதைகள் சொன்னால்க் கூட, நீங்கள் கேட்க கடமைப்பட்டு இருக்கிறீர்கள்.
தங்களின் மொழிவழி வந்த தாதா சேனன் அவர்கள் எஸ் பொவிற்கு தர்ம அடி வழங்கும் படி சக தாதாக்களுக்குக் கட்டளை பிறப்பித்திருப்பது இன்னும் முசுப்பாத்தியாக் கிடக்கு. தலித் அரசியலா தாதா அரசியலா? கனவு காண வேண்டாம் நொருக்கித் தள்ளுவம்.
பாரதிதாசன் தங்களுக்கு பொல்லுக் கொடுத்து அடிவாங்குவதோ, தாங்கள் பாரதிதாசனுக்குப் பொல்லுக்கொடுத்து அடிவாங்குவதோ வரவேற்க வேண்டிய விசயங்கள் தான். ஆயிரம் பூக்கள் மலரட்டுமே! ஆனால் சைவ வேளாளர்கள் ஒன்று சேர்ந்து தலித் ரசிகர்மன்றக் கூட்டணி அமைத்து, தலித்துகளுக்கு தத்துவ விளக்கமளிப்பது, கொள்கை விளக்கமளிப்து பற்றி மறுபரிசீலனை செய்யவும்.
தலித்துக்கள் கள்ளுச் சாராயம் குடித்தாலும் தலித்துக்களே. தாங்கள் கலகக்குரல் என்பதை நீங்கள் எப்படி அர்த்தப்படுத்தி விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தலித்துக்களை எப்படி துஸ்பிரயோகம் செய்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம். கலகக்குரலென்பது தனியே தண்ணி போட்டுவிட்டு செய்வதென்பதல்ல. குடிதண்ணிக்கும், சோத்துக்கும், சீலைக்கும், அடிப்படை மனித உரிமைளுக்கும் கூடவே கள்ளுச் சாராயத்துக்கும் சேர்த்து குரலெழுப்புவது, கலகம் செய்வது. ஐயா! முன்பு வீடுகளில் விற்கப்பட்ட கள்ளு பின், தவறணைகளில் விற்கப்பட்டது. இதற்கான காரணங்கள் என்னவென்று தங்களுக்கு தெரியுமா?
பிதாவே! இவர்களும் அவர்களைப் போலவே தாம் என்ன செய்கிறோம் என்று அறிந்தே செய்கிறார்கள். இம்முறை இவர்களை மன்னியும். இனியொரு முறை இவர்கள் தலித்துக்களின் பெயரால் தலித்துக்களை துஸ்பிரயோகம் செய்வராயினும், தலித்துக்கள் போல் பாவலா செய்வராயினும் இருக்குமிடத்து நீவிர் மன்னித்தாலும் நாம் மன்னியோம்.
சோபாசக்திகளுடனும், வாசகர்களுடனும்
பின்நவீனத்துவ ஆய்வுமுறை, வரலாற்றைக் கவிழ்த்தல், அவிழ்த்தல், மரபுடைத்தல், உன்னதங்களை சிதைத்தல் என்பன மானிடர்க்கும், இலக்கியஉலகிற்கும் தேவை என்பது மட்டுமல்ல, புதிய தேடல்களுக்கும் புதிய சென்றடைவுகளுக்குமானவை என்ற நோக்கில் சீரியசான அம்சங்கள்.
ஆனால் புகலிட தமிழ் இலக்கியப் பரப்பில் நடக்கும் சோகம் என்னவென்றால், சுகனைப் போன்ற, சோபாசக்தியைப் போன்ற எங்கள் இனிய நண்பர்களின் தலைகளில் நிவேதிதாக்கள் பெப்பர் (மிளகு) அரைப்பது தான். அண்மையில் பரிசுக்கு வருகை தந்த பின்நவீனத்தின் ஞானமுடி என்று தன்னை கருதிக்கொள்ளும் சாருநிவேதிதா வாரணாசிப் பெப்பர், ஜரோப்பியதத்துவப் பெப்பர், லத்தீன்அமரிக்கப் பெப்பர், நீட்சேவியப் பெப்பர், ஹடயோகப் பெப்பர், பாலியல் பெப்பர் என்று அரைத்து விட்டுப்போய் இருக்கின்றார்.
பதின்மூன்று (13) வயது குழந்தையுடன் பாலியல் இன்பம் துய்ப்பதை பின்நவீனத்து எழுத்தென்று கதைவிட்டிருப்பது, எவ்வளவு தூரம் சமூக அக்கறையுள்ள போக்கு? தனது ஆண்குறி மட்டுமே தமிழிலக்கிய உலகம் எனக் கனவுகாணும் சாருநிவேதிதா, ஜரோப்பாவில் பார்த்துப் பிரமித்து விட்டுப்போன லிபரல் புலுடாக்களையும், பாலியல் சுரங்கங்களையும் விட இன்னொரு உலகமுண்டு. குழந்தைகள் எப்படி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், எப்படி துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்ற குரூரங்களும், கருத்துலகமும், கண்காட்சிகளும். இந்தியாவில் அவர் கண்களில் படாவிடின் தாய்லாந்து சென்றாவது பார்க்கவும். பின்நவீனத்துவ எழுத்துக்கள் என்ற தோரணை மாய்மாலத்தை எங்களுக்கு இவர் குட்டிக்கரணம் போட்டுக் காட்ட முயன்றாலும் இவருடைய எழுத்துக்களில் ஆண்குறி மையவாதப் போக்கே முன் நிற்கின்றது.
கொடுமை என்னவென்றால், nஐர்மனி இடதுகளும் அனாகிஸ்டுகளும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்ட பாசிஸ்டு ரிச்சாட் வாக்னரின் இசையில் லயித்தபடியே, சாருநிவேதிதா பதின்மூன்று (13) வயது குழந்தையைப் பாவித்து இன்பம் துய்த்த போனோகிராபிக் கதைக்கு விமரிசனம் செய்யப் போக, பெண்களுக்கு பாலுறவு கொள்ளும் வயது என்ன? நீங்கள் யார் அதை நிர்ணயிப்பது? போன்ற எதிர்வாதங்கள் வெளியீட்டாளர்கள் தரப்பிலிருந்து வருகின்றன. ஒருக்கால் மூன்று (3) வயது என்று கருதுகிறார்களோ என்னவோ? குழந்தைகள் போனோகிராபி ஆசாமிகள் புகலிடச் சஞ்சிகைகளிலுமா? ஆசிரியன் இறந்து விட்டான் என்பதை விளக்க எங்களுக்கு இப்படி உதாரணங்கள் தேவைதானா? ஐயோ! தமிழவன் சார் நாம எங்க போய் முட்ட?
கற்க கசறடக் கற்க கற்றபின் f..kக நமக்கு தக. அப்பனே! முருகா கடவுளே என்று சக மனிசன் கொட்டாவி விட்டால்க் கூட இதோ பார்ப்பான் என்று முத்திரை குத்தும் சோபாசக்திகள், இவரை ஒரு பார்ப்பனிய சிந்தனைப் போக்கு கொண்டவரென இனம் காணத்தவறியதன் இரகசியம் என்ன?
பின்நவீனத்துவத்துக்கு எதிரானவர்கள் எல்லோரும் நேரடியாகவோ, மறைமுகமாவோ தலித்துகளுக்கு எதிரானவர்களே என அ. மாக்ஸ் அவர்கள் அடிக்கோடிட்டு கூற விரும்பியதாக, கூறிய கூற்று பின்நவீனத்துவப் போக்கை விமர்சிப்பவர்கள், எதிரானவர்கள், கட்டுடைப்பவர்கள் உன்னதங்களைச் சிதைப்பவர்கள் கலகக்குரல் எழுப்புபவர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து முற்றுப்புள்ளி வைக்கும் கூற்று. அல்லது சும்மாயிரு என்பது.
பிறகு என்ன பின்நவீனத்துவப் போக்கு? அ. மாக்ஸின் கடந்தகால, இன்றைய சமூக அக்கறை குறித்து, அவரது உழைப்புக் குறித்துக் கொச்சைப்படுத்தலோ சேறடிப்போ அல்ல மாறாக அதிகாரத்தை தன்னிலைப்படுத்தல் அல்லது குழுநிலைப்படுத்தல் குறித்த கேள்வியிது. பன்முகத்துவ வாசிப்பு பன்முகத்தன்மை என்பது வெறும்புலுடாக் கருத்துக்களாகவும், அடுத்தவரின் பிரமிப்பில் தொடுத்தவர் இன்புறுவதுமாகி விட்டது. இன்னொரு பக்கம் ஜரோப்பிய தத்துவவாதிகள் உலக புத்திஜீவிகளை (குறிப்பாக தமிழ் புத்திஜீவிகளை) உலுப்பிக் கொட்டினார்கள், குலுக்கிப் போட்டார்கள் என்ற புத்திஜீவித பிரமையைத் தவிர, ஜரோப்பியத்துவங்களில் இருந்து கற்றுக்கொள்ள தலித்துக்களுக்கு எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை.
மாறக தலித் பீலிங் அரசியல் செய்பவர்களிடம் இருந்து, தலித்துக்கள் கற்றுக்கொள்ள இன்னும் நிறையவுண்டு. இன் நவீனத்துக் கலகக்காரர்கள் கலகம் காணுமிடத்து காணாமற் போவர். அன்றேல் பின்நின்றும் மறைந்து நின்றும் கல்லெறிவர். தலித்துகளிற்கே.
முட்டு முட்டு முட்டு முட்டு முட்டு ……….
(தேசம். நெர்ரில், ஜீவ முரளி எழுதிய கடிதம்)
மேற்படி கட்டுரைக்கு வந்த குறிப்பிடத் தக்க பின்னூடங்கள் சில,
jeevan on February 9, 2008 11:13 am //தோழர் தேவதாஸ் போன்றவர்களுக்கு என்ன நடக்கின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள். பாரிசில் நடந்த தலித் மாகாநாட்டை புறக்கணித்தவர்கள் இந்த அடிப்படையில் தான் புறக்கணித்திருக்க வேண்டும். அல்லது தலித் இயக்கத்தை குத்தகை எடுப்பதில் உள்ள சாதிமேலாண்மை உளவியலாக இருக்கலாம்.//
தலித் மகாநாட்டை பிரான்சில் வாழும் தலித் மக்களாகிய நாங்களே புறக்கணித்துவிட்டோம். அதில் கலந்துகொண்ட 78பேர்களில் சுமார் 50பேர்கள் தலித் அல்லாதவர்கள். அதிலும் சுமார் 40 பேர் வெளிநாட்டிலிருந்து வந்த நீங்கள் இன்று விமர்சிக்கும் ரி.பி.சி வானொலி ஆதரவாளர்கள்.
பிரான்சில் தலித் மக்கள் கூடிய பிரதேசமான சார்சலில் (தேவதாசும் தலித் முன்னணியின் ஆக்களும் இங்குதான் வசிக்கிறார்கள்) கூட்டம் நடாத்தப்பட்டும் ஏன் நாங்கள் கூட்டத்திற்கு வரவில்லை. வெறுமனமே தலித் கோசம் மக்களை வென்றெடுக்காது. தலித் மாநாட்டில் ஆட்கள் கலந்து கொள்ளாததற்கு நீங்கள் புதிய கண்டுபிடிப்புக்களை செய்யாதீர்கள்
theevaan on February 9, 2008 11:37 am //சோபாசக்தி வேளாளனாக இருக்கலாம். ஆனால் அவர் தலித்துக்களின் உணர்வுகளை புரிந்தவர்.// சி லுவைராஜ் உங்களின் இக்கருத்தை ஏற்றூக்கொள்ள முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக இந்தியாவில் இறந்த முன்னாள் புளட் உறூப்பினர் உருத்திரன் சோபாசக்தியென்ற அன்ரனிதாசனின் ஊரைச் சேர்ந்தவர். சோபாசக்தியின் நாவல்களில் அவர் எழுதிய காலப் பகுதியில் நடந்த சம்பவங்களா தெரிந்திருந்தவர்.
உருத்திரனது கருத்துப்படி சோபாசக்க்தி சொல்வது போன்ற பல சம்பவங்கள் மெருகூட்டல்கள் என்பதையெ சொன்னார். அத்துடன் அவரது எழுத்து நல்லதேயொளிய கருத்துகள் எல்லாம் அதிகபட்சம் மெருகூட்டல்கள். சோபா தன்னை சந்தித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தான் அது பற்றீ கருத்தாடியதாகவும் சொன்னார். புனை கதை எழுத்தாளரையெல்லாம் தலீத்துக்கலின் காவலராக சித்தரிப்பதை ஏற்றூக்கொள்ள முடியாது. தன்னை பிரபல்யமாக்கும் உணர்வுகளையா தலீத் உணர்வு என்பது.
thanabal on February 10, 2008 10:07 am இன்று சமூக வாழ்வுக்கான எந்த தார்மீக நெறிகளும் புகலிடத்தில் வாழும் நமது எழுத்தாளர்கள் கவிஞர்கள் அரசியல்வாதிகள் தலித்தியவாதிகள் மாக்சியவாதிகள் எவரிடமும் இல்லாமல் போய்விட்டது. தமது சுயநல வாழ்வுக்காக எதையும் செய்ய தயாரான கூட்டமாக இவர்கள் மாறிவிட்டார்கள். இங்கே தலித்தியம் பிழைப்புக்கான தம் விளம்பரத்திற்கான தம் தவறான நடத்தைகளை மறைப்பதற்கான கருவியாக மாறிவிட்டது.
இவர்களின் இந்த சண்டைகளும் அறிக்கைச் சமர்களும் குட்டையில் ஊறிய இந்த மட்டைகளின் அதிகாரத்திற்கான போட்டிகளே தவிர வேறொன்றும் இல்லை. நாளை இவர்கள் எல்லோரும் கூடிக் குழாவி கலவி இன்பம்பெற்று இன்புற்று இன்னொருவருக்கு குழிபறிக்க முடிவெடுப்பார்கள். இங்கே கொள்கையும் கோட்பாடும்போய் இவர்களை இணைக்கும் புள்ளிகளாக பொறாமையும் எரிச்சலும் சூதுமே இருக்கும். நாளை இவர்கள் தங்களுக்குள் மோதி சட்டைகளையும் கோவணங்களையும் ஆளுக்காள் கிழித்துக் கொள்வார்கள்.
மறுநாள் அறிக்கைகள் பேட்டிகள் அதிரும். ஆளுக்காள் நாறடிப்பார்கள். நாமும் வாசித்து நாறடிப்பில் இன்புறுவோம். எனவே நாம் எல்லோரும் ஒட்டு மொத்தமாக இந்த சமூகத்தை நாறடிப்பதற்கு இந்த சமூகத்தை உள்ளிருந்து அழிப்பதற்கு புகலிடத்திற்கு இறக்குமதியாக்கப்பட்ட விசக் கிருமிகளாகவே உள்ளோம்.
.i.d.mani on February 10, 2008 12:38 pm அ. மார்க்ஸ், வேலைநிறுத்தம் செய்ததற்காக, கூட்டத்தோடு கூட்டமாக, ஜெயலலிதா அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஓய்வு பெறும்வரை அரசு வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தவர். இது நடந்து சில ஆண்டுகள் சென்றுவிட்டன. இதுபோன்ற தனிப்பட்ட சறுக்கல்களைப் பெரிதுபடுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போது பணி ஓய்வுபெற்ற பின்னர் தன் ஆசிரியர் பணிக்காலம் பற்றி விரிவாகக் கட்டுரை எழுதியிருக்கிறார் அ. மார்க்ஸ். போலித் தன்னடக்கத்துடன் தன்னுடைய பணிக்கால வீராப்புகளைப் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்.
அரசு வேலையில் இருந்தபடி பல ‘புரட்சிகர’ நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் பணியில் பிரச்சினையின்றித் தப்பியது ‘குருட்டு அதிர்ஷ்டம்’ எனக் குறிப்பிடுகிறார். மேற்படி மன்னிப்புக் கடித விஷயம் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அ. மார்க்ஸ் அரசுப் பணியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்ததற்குக் காரணம் ‘குருட்டு அதிர்ஷ்டம்’ அல்ல, மாற்றுக் கருத்துகளாக அவர் முன்வைத்தவை தமிழகத்தின் ஆளும் பெரும்பான்மைக் கருத்தியலுக்கு உவப்பானவை என்பதுதான்.
முதுமையை அ. மார்க்ஸ் அளவிற்கு இழிவுபடுத்தி இருப்பவர்கள் தமிழகத்தில் எவரும் இல்லை. முன்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொலை செய்துவிட வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டார். எழுத்திலும் ஹிட்லரின் இந்தப் பாசிசக் கருத்தை அவர் வழிமொழிந்து இருக்கிறார். தமக்கு 50 வயது நெருங்கியபோது இப்பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டார்.
அ. மார்க்சுக்கு ஒரு அழைப்பு. ‘காலச்சுவடு’ பற்றிய பொய்மைகளைப் புறம்பேசித் திரியாமல் ‘காலச்சுவடு’ ஆசிரியர் குழுவினருடன் நேரடியான விவாதத்திற்கு வாருங்கள். அவ்விவாதத்தை முழுமையாகப் பதிவுசெய்து பிரசுரிக்கலாம். இது அழைப்புதான். சவால் அல்ல. (என் மின்னஞ்சல் முகவரி: kannan31@gmail.com)
thanabal on February 10, 2008 2:16 pm தம்பி சிவா தனிமனித ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. எவை எவை தனிமனித ஒழுக்கம் என்பது அவர்களின் அரசியலையும் வர்க்க நிலையையும் பொறுத்தது.
பெண்களை சூறையாடிவிட்டு பெண்ணியமும் பேச முடியும். தலித்தியமும் பேச முடியும். மாக்ச்சியம் பேசிக்கொண்டு பச்சைத்தனமான சுரண்டல் முதலாளிக்கு முதுகு சொறிஞ்சு கொண்டு எந்தச் சுரனையுமில்லாமல் அரசாங்க பணத்திற்காக மனைவியை குழந்தை பெறும் இயந்திரமாக்கி விட்டு விடியவிடிய பிணாத்தும் கட்டுரைகளையும் நாம் எழுத முடியும். காணும் பெண்களையெல்லாம் கூட்டுக் கலவிக்கு கற்பளை பண்ணிவிட்டு அப் பெண்களிடம் பெண்ணியமும் நம்மால் பேசமுடியும். இதெல்லாம் தனிமனித ஒழுக்கத்துக்குள் அடங்காவிடின் நாம் என்ன செய்யமுடியும்.
தம்பி சிவா தனிமனித ஒழுக்கம் பற்றி கதைத்தால் முகமூடியை கலட்டிவிட்டு வா என்று நச்சரிப்பதை விடுத்து தனிமனித ஒழுங்களை கடைப்பிடிக்க வலியுறுத்த வாருங்கள். உங்களைப் போன்ற எடுபிடிகளால் தான் இன்றைய புகலிட இலக்கிய அரசியல் சமூகம் நாற்றம் எடுக்கின்றது
Sunday, 10 February 2008
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment