வலைப்பதியும் இந்திய நண்பர்களிடம் அவர் முன் வைத்த இந்தக் கருத்துப் பற்றிய எதிர்வினைகளை, உங்கள் பார்வைகளை பின்னூட்டம் வாயிலாகத் தெரியப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.
// இந்தியாவில் சாதியமைப்பு அரசியலுக்காக பேணப்படும் தேவை உருவாக்கப்பட்டு தலித்திய அரசியல் என்பது அங்கு ஒரு பாத்திரத்தை வகிக்கின்றது. அப்பாத்திரத்தின் நோக்கம் சாதிய கட்டமைப்பை இருக்கமாக பேணி அதனை ஒரு அட்சயபாத்திரமாக மாற்றுவதே.//
yathavan on January 11, 2008 5:13 am
விவாதத்தின் திசை மாறிவிட்டது போல் படுகிறது. யாழ்ப்பாணத்தின் சாதியத்தின் தன்மை அதன் வளர்ச்சி அதன் தற்போதய உருமறைப்பு பற்றியதாக விவாதம் சென்றிருக்க வேண்டும். சுகன் என்பவர் எழுப்பிய வினா சாதியத்தின் தற்போதய உருமறைப்பு பற்றியது. அதை அவர் ஆதாரங்களுடன் தரத்தவறியுள்ளார். மறுபுறத்தில் அதை வெட்டி வாதிப்பவர்கள் கூட மலினப்படத்துவதன் மூலமே சாதியத்தின தீவிரத்தை மறைக்க முற்படுகிறார்கள்.
சாதியத்தின் வீழ்ச்சி ஒரு புதிய சாதிய மேலாண்மைக்கு வழிகோலுவதாக அமைய வேண்டும் என்கிற கண்ணோட்டத்தை ஒரு நச்சு வட்டமாகவே நான் பார்க்கிறேன். தற்போது சாதிய மேலாண்மை குறித்து அதிகம் உரையாடுபவர்களிடையேயும் இந்த நச்சுத்தன்மையை பார்க்க முடிகிறது.
இன்னும் அமைதி காலத்தில் யாழ்ப்பாணத்தில் காணி வாங்கல் விற்றல் பேரளவில் நடந்தபோதும் அது சாதிய மேலாண்மையை இல்லாமற் செய்வதை நோக்கமாக் கொண்டிருக்கவில்லை. மாறாக எனது உரத்த கருத்தான புதியசாதிய மேலாண்மையை நிலைநிறுத்தவே மேற்கொள்ளப்பட்டன என நான் உணர்கிறேன். எனது இந்த உரத்த கருத்தை பிழையென நிறுவப்படுவதை நான் பெருதும் விரும்புகிறேன்.
இவ்விவாதத்தில் கலந்துகொண்டோரும் அக்கறையுடன் அவதானிப்போரும் எதிர்காலத்தில் மேலாண்மை வகிக்க வேண்டிய சாதியாக எது இருக்க வேண்டும் என்ற புள்ளியில் இருந்து ஆரம்பிக்காமல் சாதியத்தின் செல்வாக்கு அற்ற ஒரு சமூகத்தை உருவாக்குதல் என்ற புள்ளியில் இருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதனால் தான் இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் உள்ள தலித் என்ற பிரயோகத்தை இங்கு தவிர்த்தேன். இந்தியாவில் சாதியமைப்பு அரசியலுக்காக பேணப்படும் தேவை உருவாக்கப்பட்டு தலித்திய அரசியல் என்பது அங்கு ஒரு பாத்திரத்தை வகிக்கின்றது. அப்பாத்திரத்தின் நோக்கம் சாதிய கட்டமைப்பை இருக்கமாக பேணி அதனை ஒரு அட்சயபாத்திரமாக மாற்றுவதே.
மேற்போந்த வகையிலேயே எனது தர்க்கம் கட்டமைக்கப்படுகிறது. அதாவது இந்திய தலித் அரசியலின் நோக்கம் சாதியகட்டமைப்பைப் பேணி அதன் மூலம் சமூக அசைவியக்கத்தை கட்டுப்படுத்தல். மாறாக இலங்கையில் வேண்டப்படுவது சாதியம் உலர்ந்து போதலே.
என் கருத்துக்களையும் இந்த உரத்த கருத்தையும் புடமிட்டுப் பார்க்கும் அக்கறையுடன் திறந்த மனத்துடன் எதிர்வினைகளை எதிர்பார்த்திருக்கிறேன்.
நன்றி:தேசம். நெட் மற்றும் யாதவன்.


0 comments:
Post a Comment