தமிழிரின் அண்மைய தேசிய விடுதலைப் போரினை இந்திய வல்லாதிக்க சக்திகள் பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தின் மூலம் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளன.
நோர்வேயின் பின்னணியில் இயங்கி சிறிலங்காப் படைகள் தம்மை வலுப்படுதுவதற்கான கால அவகாசத்தை பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தின் மூலம் இந்தியாவே சிறிலங்காப் படைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டங்களை இந்திய உபகண்டத்தில் அடக்கி ஒடுக்குவதன் மூலமே இந்திய வல்லாதிக்க சக்திகள் தம்மை ஆளும் வர்க்கமாக வடிவமைத்துக் கொண்டுள்ளன.
இந்தியப் பிராந்திய வல்லாதிக்கதுக்கான போட்டியில் இந்தியாவையே மேற்குலகு வளர்ந்து வரும் சீன ஏகாதிபத்தியதுக்கு எதிரான சக்தியாகப் பயன் படுத்தி வந்துள்ளது.அதனாலையே இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களுக்கு எதிரான போர்களுக்கு மேற்குலகம் தனது ஆதரவை வளங்கி வருகிறது.தமிழ்த் தேசிய இன விடுதலைப்போரை அணைக்கும் பேச்சுவார்த்தை என்னும் நாடகம் இந்த நோக்கிலையே இந்தியாவால் மேற்குலகின் ஆதரவோடு நடாத்தப்பட்டது.
சீனா இந்தியாவுக்கிடையேயான முரண்பாட்டையும், சீனாவுக்கும் மேற்குலகிற்கும் இடையேயான முரண்பாட்டையும் சிங்களப்பேரினவாதம் நன்கு பயன் படுத்தியது.ஆனால் இந்த நலங்களின் அடிப்படையிலான முரண்பாடுகளை சரி வரப்பாவிக்க தமிழ்த் தேசியத் தலமை தவறி விட்டது.இந்தியாவிற்கும் எமக்கும் நீண்டகாலக் கலாச்சாரத் தொடர்பு இருக்கிறது என்று சொல்லியும் இந்தியாவின் நீண்டகால நண்பர்கள் தாமே என்றும் சொல்லியும் தங்களைத் தாங்களே நம்ப வைத்து தமிழ்த் தேசியத் தலமை தன்னைத் தானே அழித்துக்கொண்டது.
இந்திய உபகண்டத்தில் தமிழருக்கும் குறிப்பாகாத் திராவிட வழி வந்த மக்களுக்கும் எமக்குமே பொதுவானா கலாச்சாரத் தொடர்பு இருக்கிறது.இந்திய ஆழும் வர்க்கத்துடன் அல்ல.தமிழ்த் தேசிய இன அடையாளம் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் தனது சுய இருப்புக்கான ஒரு அச்சுறுத்தலாகவே நோக்குகிறது.இந்த நிலையில் தமிழரின் போராட்டத்துக்கு இந்த ஆளும் வர்க்கம் உதவி செய்யும் என்று எதிர்பார்ப்பது, எதிர் பார்த்தது எவ்வகையில் நியாயமானாது?
மாற்றாக சீனாவுக்கும் இந்தியாவிற்க்கும் இடையேயான முரணையும், மேற்குலகிற்கும் சீனாவுக்கும் இடையேயான முரணையும் தமிழ்த் தேசிய தலமை பயன் படுத்தி இருந்திருக்க வேண்டும்.இனியாவாது தமிழர்கள் சீனாவுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்திய உபகண்டத்தில் நடைபெறும் அனைத்து தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.இந்தியா என்னும் வல்லாதிக்கத்தை அழிக்காமால் நாம் என்றும் விடுதலை பெற முடியாது.ஒரு சில திராவிடக் கட்சிகளோ தனி நபர்களோ எமக்கு உதவப் போவதில்லை.அவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடியாட்களாகி பல வருடங்கள் ஆகின்றன.இவர்களை நம்பி ஒரு பலனும் இல்லை.
இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான போர் விரிவாக்கப்பட வேண்டும்.இந்தியாவின் அழிவிலையே எமது விடிவு இருக்கிறது, அதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் செல்லலாம்,ஆனால் அதுவே யதார்த்தம்.
Saturday, 13 June 2009
Sunday, 31 May 2009
மரமண்டை.

வசை மொழியில் உளறுதல் ஆய்வாம்,
தர்க்கம் அற்ற பிதற்றல்கள் அறிவாம்,
பரிகசிக்கும் பதிவுலகை அறியாது,
புலம்பும் பாலகனே கேளாய்
புரட்சி,மக்கள்,போராட்டம்,வர்க்கம்,உறவு கூட்டுக் கலவை
கடலை,வெங்காயம்,பருப்பு,கரு வேப்பிலை கலந்து சுண்டல் விற்கும்,
கடற்கரைச் சிறுவன் தருவான் இதிலும் அதி சுவைப் புரட்சிக் கலவை.
மாலை நேர போதை தெளிய கலவைப் பதிவு உனக்கு
சீவன் போகுது அங்கு அவர்களுக்கு.
உண்மை ,போலிகளை நன்கறிவர் மக்கள்
புலி அழிந்தது,பிரபாகரன் அழிந்தான்,
மக்களின் விடுதலை ஆன்மாவை எங்கனம் அழிப்பீர்கள்?
மக்களின் மனங்களில் எந்த மாற்று உட்புகுந்தது?
ஏவலாலனை ஏகாதிபத்தியம் அழித்ததாம்,
இனி யார் அவரிற்கு ஏவல் செய்வார்?
ஏவலாலனை அழிப்பதால் அவர்க்குத் தான் என்ன பலன்?
தர்க்கம் அற்ற புலம்பல்கள்,
முன் முடிபுகளை நிறுவும் விசரரின் சமன் பாடுகள்.
முரண்பாடுகளே பிரசுவிக்கின்றன இயக்கங்களை
இது இயங்கியலின் அரிச்சுவடி
முரண் தீராது, இயக்கம் தான் அழியுமோ?
பிரபாகரனைப் பிரசவித்த முரண்,
இன்னொரு பிரபாகரனை இனிப் பிரசவிக்காதோ?
போராடுவது மக்கள் உரிமை
அதை மறுப்பது தான் மனித உரிமையாம்
உம் விருப்பு வெறுப்பின் படி போராட
மக்கள் என்ன மந்தைகளோ?
இந்திய அரசு அரிசிப் பிச்சை போட்ட பொழுதுகளில்
நாம் கேட்பது சுதந்திரம் பிச்சை அல்ல என்று வீராப்புப் பேசியோர்
பிச்சை வேண்டாம் நாயைப் பிடியாம்
அன்று மரித்த ஆயிரம்,ஆயிரம் பேர் மட்டும் என்ன மந்தைகளோ ?
இன்று புதிசா 'புதினம்' கண் முன் காட்டியதால் முழைத்ததோ உங்கள்
கேடு கெட்ட மயிர் மனிதாபிமானம்.
போராடுவதும் விடுவதும் போராடும் மக்களின் தெரிவு,
அதுவரை புலத்தில் பொத்திக் கொண்டு இருங்கள்.
வெல்லும் தருணங்களில் வெற்றிப் பதிவுகள் சூடாகவும்
தோற்கும் தருணங்களில் மனிதாபிமானப் பதிவுகள் சூடாகவும்
மக்களின் போராட்டம் என்ன தமிழ் மண நட்சத்திரமோ?
என்றும் மக்களின் பக்கம் நிற்பதே மனிதாபிமானம்
மக்களே நிர்ணயிப்பார் அவர் தம் பாதை தனை.
அதுவரை மூடி வையுங்கள் உங்கள் சூடாக்கும் பதிவுகளை .
தமிழ் இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப் புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம்
கூட்டுமன அதிர்விற்குள் ஒரு இனம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு
பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ்)
யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட்)
சித்ரலேகா துஸ்யந்தன் (வியன்னா)
பிரியதர்சினி சற்குணவடிவேல் (பர்சிலோனா)
தமிழீழ விடுதலைப் போராட்டம் எந்த வித மறு பேச்சிற்கும் இடம் வைக்காமல் முடிவடைந்து விட்டது அல்லது முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது நீர்த்துப்போய் படிப்படியாக அந்த நிலையை அது எய்தும் என்று எதிர்வு கூறல்களாக அல்லாமல் அவை முடிவுகளாகவே முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு சூழலுக்குள் ஒரு இனத்தின் நீண்ட நெடிய போராட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.
போராட்டத்திற்கு வெளியே இத்தகைய சொற்பதங்கள் புழக்கத்திற்கு வந்து நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் துரதிஸ்டவசமாக நாமும் இவற்றை தற்போது உச்சரிக்கத் தொடங்கியிருக்கிறோம். அதன்வழி அவற்றை நம்பவும் தொடங்கியிருக்கிறோம் அல்லது நம்பும்படி கட்டாயப்படுத்தபடுகிறோம். ஒரு தமிழ் உயிரியின் ஒவ்வொரு கணமும் இத்தகைய நிர்ப்பந்தத்திலேயே கழிந்து கொண்டிருக்கிறது.
உண்மையிலேயே தமிழீழ விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா? இந்த சிக்கலான கேள்விக்குள் நாங்கள் இறங்க விரும்பவில்லை. ஏனெனில் அது எமது வேலை இல்லை. அத்தோடு நாம் தீர்க்கதரிசிகளோ ஆருடக்காரர்களோ கிடையாது. படைத்துறை ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் பதில் தெரியாமல் "பேந்த பேந்த" முழித்துக்கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்குள் நுழைந்து எம்மைக் காயப்படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.
ஆனால் நாம் வேறு ஒரு கோணத்தில் இந்த வரலாற்றுக் காலகட்டத்தை ஆய்வு செய்ய முனைந்திருக்கிறோம். ஒரு வேளை மேற்கண்ட கேள்விக்கான பதிலை இந்த ஆய்வினூடாக நீங்கள் தரிசிக்கலாம். அதற்கு எந்த உத்தரவாதத்தையும் நாம் முன்கூட்டியே வழங்கவிரும்பவில்லை.
"தமிழீழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதா?" என்ற கேள்வியைத்தான் மையப்படுத்தி நாங்களும் ஆய்வு செய்யப்புகுந்துள்ளோம். இது என்ன முரண்பாடு என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இதில் எந்த முரண்பாடும் இல்லை. நாம் எல்லோரையும்போல் அந்தக் கேள்விக்குள்ளாக இறங்காமல் மேலும் கீழுமாக அதைச்சுற்றிப் பயணித்து அக் கேள்வியின் உருவாக்க நியாயங்கள் மீதும் எதன் அடிப்படையில் இது முன்மொழியப்படுகிறது என்பதனையும் ஒரு உளவியல் ஆய்வாக முன்வைக்க முனைந்துள்ளோம். இந்த ஆய்வு கூட எமக்கு முக்கியமனதல்ல. இதனூடாகக் கிடைத்திருக்கும் ஒரு உளவியல் வாசிப்பையே நாம் பிரதானப்படுத்த விரும்புகிறோம்.
இப்பரந்த பூவுலகில் ஒவ்வொரு மனித உயிரியும் தாம் எதிர்கொள்ளும் வாழ்வியல் புறநிலைக்கேற்ப பல கருத்துருவாக்கங்களினால் கட்டமைக்கப்படுகின்றன. இதன்வழி இப்பூமியில் கட்டவிழும் ஒரு நிகழ்விற்கெதிராக அல்லது அந் நிகழ்வு குறித்து ஒவ்வொரு உயிரியும் வேறுபட்ட பார்வையை அல்லது எதிர்வினையைப் பதிவு செய்கின்றன. இதை சற்று விரிவு படுத்தினால் இனம், மதம், மொழி, கொள்கை, கோட்பாடுகள் சார்ந்து குழுமங்களாகவும் ஒருமித்த - வேறுபட்ட கருத்துருவாக்கங்களும் உருவாகின்றன - மாற்றம் பெறுகின்றன.
பெண்ணியம், மானுடவியல், தத்துவம், சமூகவியல் சார்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட எமக்கும் உலக சமூக நிகழ்வுகள் குறித்த ஒரு வாசிப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முடிவு குறித்த பல பிதற்றல்களையும், உளறல்களையும் அதன்வழி தொடர் பதற்றத்திற்குள்ளாகியிருக்க��
�ம் ஒரு இனத்தின் அரற்றல்களையும் அங்கலாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு நீண்ட உரையாடல்களை நிகழ்த்தி விவாதித்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு கருத்துருவாக்கத்தினைப் பெற்றிருக்கிறோம்.
இக் கருத்துருவாக்கத்துடன் யாரும் முரண்படலாம். நாம் அதை மறுக்கவில்லை. ஆனால் இதன் பெரும்பான்மை சாத்தியங்களை யாரும் மறுதலிக்க முடியாது. நாம் இந்த ஆய்வை இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இதை அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக தமிழ்ச்சூழலுக்கு உடனடியாகக் கொண்டு வருவதன் நோக்கம் சில மணித்தியாலங்களை போரின் இறுதி வெற்றிக்கான காலக்கெடுவாக அறிவித்துவிட்டு மிக மோசமான இனச்சுத்திகரிப்பில் இறங்கியிருக்கும் ஸ்ரீலங்கா அரசின் கபடத்தனத்தை நாம் புரிந்து கொள்வதுடன் எம்மிடையே தோன்றியிருக்கும் சில நம்பிக்கையீனங்களிற்கும் அடிப்படை புரிதலின்மைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கேயாகும். இவை குறித்த சரியான புரிதலில்லாவிட்டால் நாம் தொடர்ந்து உலகத்துடன் பேச முடியாது- எமது தொடர் போராட்டங்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்காது.
உண்மையிலேயே இவை குறித்து எமக்குள்ளாகப் பேசிக் கொள்ளத்தேவையில்லை. ஏன் எமது எதிரிகளான ஸ்ரீலங்கா அரசிற்குக் கூட எந்தச் செய்தியும் இதற்குள் இல்லை. மாறாக இந்தக் கருத்தியலை கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள் எமது போராட்டத்தின் மீது ஆதிக்கம் nசுலுத்தும் மூன்றாவது சக்திகளான இந்தியாவும் மேற்குலகமும்தான். ஏனெனில் நாளை ஒரு இனத்தின் எதிர்வினைக்குள் சிக்கி விளைவுகளை அறுவடை செய்யப்போவது அவர்கள்தான்.
சிலவற்றை வெளியாகப் பேசிவிட வேண்டியதுதான். எந்த பூசிமெழுகல்களும் பாசாங்குகளும் இனி வேலைக்கு உதவாது. எமது ஆய்வின் முடிவு பயங்கரமானது மட்டுமல்ல பெரும் அச்சம் தருவதும் உலக ஒழுங்கை நிர்மூலமாக்கக்கூடியதும்கூட. அதாவது ஒற்றை வரியில் சொன்னால் மூன்றாவது சக்திகளின் துணையுடன் படைத்துறை ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அல்லது தோற்கடிக்கப்படுவது போன்ற பாவனைகளையும் உளறல்களையும் அனைத்துத் தரப்பும் தற்போதுள்ளதுபோல் தொடருமாயின் எந்த கணத்திலும் இந்த உலகத்தின் மீது பல வடிவங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தமிழ் இனம் தன்னையறியாமலேயே தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் வன்முறை வடிவங்களைக்கூட நாம் இனங்கண்டிருக்கிறோம்.
உடனடியாக போரை நிறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏபிரநிதித்துவத்தை ஏற்று தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவிடத்து தமது பிராந்திய மேற்குலக நலன்கள் சார்ந்து தமே தம்மைச்சுற்றி வரைந்து வைத்திருக்கும் உலக ஒழுங்கைக் காப்பாற்ற ஒரு சிறிய விடுதலைப்போராடத்தினதும் அதன் மக்களினதும் அழிவுக்கு எந்த மூன்றாவது சக்திகள் துணைபோனதோ அந்த உலக ஒழுங்கை அழிவுக்குள்ளான அந்த இனம் வன்முறை, பயங்கரவாத வடிவங்களினூடக சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதை இந்த உலகம் எதிர்கொள்வதைத்தவிர வேறு மாற்று விளைவுகள் கிடையாது. ஏனெனில் அந்த இனம் தனது சுய நனவு மனத்திலிருந்து விடுபட்டு - வெளியெடுக்கப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. அதாவது அது ஒரு கூட்டு மன அதிர்விற்குள் தள்ளப்பட்டிருக்கிறது.
நாம் இந்த ஆய்வை செய்ய புகுந்த கதையை சுருக்கமாவேனும் விளக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் தமிழர்களாக இருந்தபோதிலும் எமது வாழ்வை தமிழ்ச்சூழலுக்கு வெளியிலேயே கட்டமைத்துக்கொண்டவர்கள். (இதில் விதிவிலக்கு நண்பர் பரணி கிருஸ்ணரஜனி - அவர் தொடர்ந்து தமிழ்ச்சூழலில் இயங்கி வருபவர்) காரணம் எமது கல்விப்பின்புலம், தொழில் சார்ந்த நடைமுறைகளும் குறிப்பாக சுயநலன்களும் என்று கூறலாம். தமிழர்களாக இருந்தும் எமது இனத்தின் போராட்டத்தை செய்தியாகவே அறிந்து கொள்ள முற்பட்டவர்களாக இருந்தோமேயொழிய பங்குதாரர்களாக நாம் இருக்கவில்லை. இப்போது அதற்காக நாம் வெட்கப்படுகிறோம் - வேதனைப்படுகிறோம்.
திடீரென்று நாம் எம்மை தமிழர்களாக உணரத்தொடங்கியது ஒரு இனம் அழியத்தொடங்கியதிலிருந்துதா��
�் என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கத்திற்குரியதும்கூட. நாம் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் புலிகள் பார்த்துக்கொள்வார்கள் அவர்கள் போராடி ஈழம் எடுத்த்துத்தருவார்கள்தானே என்று இருந்துவிட்டோம். இது எமது நிலைப்பாடல்ல, பலரதும் நிலைப்பாடும் இதுதான்.
இந்த மனோநிலையில்தான் இதுவரைகாலமும் இருந்திருக்கிறோம் என்பதையே எமது ஆய்வினூடகத்தான் நாம் கண்டுபிடித்தோம் என்பதே ஆச்சரியமாக மட்டுமல்ல அதிhச்சியாகவும் இருக்கிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பதாகவும், தொடர்ந்து நிலங்களை கைப்பற்றுவதாகவும் ஸ்ரீலங்காக அரசு அறிவித்ததோடு மட்டுமல்ல பல மூன்றாம் சக்திகளின் துணையுடன் உலக அளவில் அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைகளைக் குத்தி அவர்களை ஓரங்கட்டத்தொடங்கியிருந்தது��
�் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஒரு வித வெறுமைக்குள் தள்ளி பதற்றமடையச் செய்திருந்ததை அப்போது உணராதவர்களும் இப்போது உணர்கிறார்கள். இதைத்தான் கூட்டுமன அதிர்வு என்ற உளவியல் சிக்கலாக விளக்க முற்படுகிறோம்.
விடுதலைப் போராட்டத்தோடு தம்மை தாயகத்திலும் புலத்திலும் நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டவர்கள் மட்டுமின்றி எம்மைப்போன்றிருந்த ஈழத்தமிழர்கள் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகள் அனைத்துமே என்னவென்று அறியாமலேயே இந்த கூட்டுமன அதிர்வுக்குள்ளாகியதுதான் ஆச்சர்யம். தமிழகம் மட்டுமின்றி தென்னாபிரிக்கா, மலேசியா, மொறீசியஸ், பிஜித் தீவுகள் என்று ஒரு இனமே அதிர்ந்தது - இன்னும் அதிர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் சட்ட ஒழுங்குகளையும் மீறி நாம் இன்று வீதியில் இறங்கியிருப்பதே அதற்கு சாட்சி.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் நிறைந்து கிடக்கும் எமது ஆய்வை சுருக்கமாக இங்கு விளக்குவது கடினமானது மட்டுமல்ல பல உளவியல் வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கமும் கிடையாது. அதைத் தொடர்ந்து விளக்குவது உங்களுக்கு அயர்ச்சியையும் தரும். சுருக்கமாக சிறிய விளக்கங்களையே நாம் உங்கள் முன் வைக்க விழைகிறோம்.
இந்த கூட்டுமன அதிர்வுக்கு ஓரே காரணம் எதிரி நிலத்தை விழுங்கியதோ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதோகூட அல்ல. பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமைத்துவம் கைநழுவிக்கொண்டிருப்பதாகவும��
� தமது தலைமையை எதிரியானவன் பலருடன் கூட்டுச்சேர்ந்து அழிக்க முற்படுகிறான் என்றும் எல்லைகள் கடந்து ஒட்டுமொத்த தமிழினமும் நம்பத் தொடங்கியதுதான் இக்கூட்டுமன அதிர்வின் முதன்மையான காரணம் ஆகும். எமது ஆய்வின் மிக முக்கியமான அம்சம் இது.
திடீரென்று கொஞ்சப்பேர் வெளிக்கிட்டுவந்து ஆளாளுக்கு வன்முறை, பயங்கரவாதம், மனிதக் கேடயம் என்று அந்த இனத்திடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் மிக மோசமான வன்முறையை அந்த இனத்தின் மீது பிரயோகித்துக்கொண்டே அந்த மூன்று தசாப்த கால வாழ்வைக் குலைப்பதென்பது மிக அப்பட்டமான மனித உரிமை மீறலும் மிகமோசமான வன்முறையுமாகும்.
புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.
இதைத்தான் எமது ஆய்வில் கடுமையாக முன்வைக்க விரும்புகிறோம்.
அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் "NATIONAL POST" மக்களின் போராட்டங்களை முன்வைத்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. அது தமிழர்கள் தமது போராட்டங்களில் புலிகளின் கொடியையும் அதன் தலைவரினது படங்களையும் வைத்திருப்பதைப் பார்த்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்களை நடத்துவது போல் தெரியவில்லை, மாறாக தடைசெய்யபப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளைக் காப்பாற்றவதற்கே இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக சந்தேகம் வெளியிட்டிருந்தது.
"NATIONAL POST" உட்பட எல்லோருக்கும் ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் தேவையில்லை, தமது அரசியல் தலைமைகள் என்று ஒட்டு மொத்த இனமுமே நம்புகிற புலிகளைக் காப்பதற்கும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை வாங்கித் தருவதற்குமாகவே மக்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். இதில் நீங்கள் புதிதாக எந்தக் கண்டுபிடிப்பையும் செய்யத் தேவையில்லை.
முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு இனம் படிப்படியாக வளர்த்த நம்பிக்கையும் அரசியல் அவாவும் புலிகளின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதன் பெருபிம்பமாக தலைவர் பிரபாகரனை அந்த இனம் வரித்து நீண்ட காலங்களாகிவிட்டது. இதை உளவியல் மொழியில் கூறினால் ஒவ்வொரு தழிழனினதும் உள்ளத்தில் அவர்களது அரசியல் அவா பிரபாகரன் என்ற உருவத்திலேயே ஆன்மாவாக உறைந்து கிடக்கிறது. அவரையும் அவர் உருவாக்கி வளர்த்த அரசியல் கட்டமைப்பையும் அழிப்பதென்பது ஒவ்வொரு தமிழனினதும் ஆன்மாவில் கைவைப்பதற்கு ஒப்பானது. அதுதான் இப்போது ஒட்டுமொத்த இனமும் அதிர்வுக்குள்ளாகியிருக்கிற��
�ு.
இந்த அடிப்படையில்தான் நாம் எமது ஆய்வை வளர்த்துச் சென்று ஒரு கருத்துரலவாக்கத்தைப் பெற்றிருக்கிறோம். இனி நாம் விடயத்திற்குள் நுழைவோம்.
மேற்படி விளைவுகளின் காரணமாக கடந்த ஒரு வருடமாக ஒருவிதமான வெறுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக அலைந்து திரிந்த நாம் எமது பிரச்சினையை கண்டுபிடித்ததும் இந்த ஆய்வைச் செய்ய வேண்டும் என்று தூண்டியதும் ஒரு கருத்தரங்கு என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அண்மையில் ஸ்பெயின் பர்சிலோனா பல்கலைக்கழகத்தில் "Psychology of crime : Several psychological factors that figure into why people commit crimes" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கே அது. "பெண் உளவியல்" தொடர்பான எமது மேலதிக ஆய்வுகளின் பயன்பாட்டிற்கமையவும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் இடையிலான தொடர்பை முன்னிறுத்தி கலாநிதி பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் எமது தோழி ஒருத்தியின் நச்சரிப்பு தாங்காமாலும் நாங்கள் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டோம்.
தனிமனித குற்றங்கள் எப்படி சமூக குற்றங்களாக மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதிலிருந்து தொடங்கி வன்முறை, பயங்கரவாதம், உளவியல் ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பையும் தொடர்பையும் மிகத்துல்லியமாக வரையறை செய்தது மேற்படி கருத்தரங்கு.
குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் தனிமனிதன் தொடங்கி அரசு, நிறுவனங்கள் வரை இதைப் பெரும்பாலும் கணக்கிலெடுப்பதில்லை. இதை வேறொரு மொழியில் கூறினால் தமது வசிதிக்கேற்ப மறந்து விடுகிறார்கள் என்று நாம் கூறிக்கொள்ளலாம்.
குற்றம் என்ற பொது வகைமைக்குள் தனிமனித குற்றம், சமூக குற்றம், போராட்டம், ஆயுதக்கிளர்ச்சி, வன்முறை, பயங்கரவாதம் என்ற தனி அலகுகளாகப் பிரித்து அவற்றின் உளவியல் பிரதிபலிப்பையும் தாக்கங்களையும் ஆய்வாக முன்வைத்தது மேற்படி கருத்தரங்கு.
உண்மையைக் கூறப்போனால் சிக்மன்ட் பிராய்டையும் லக்கானையும் அதன் வழி சர்த்தரையும் கற்றுத் தெளிந்த ஒருவருக்கு மேற்படி ஆய்வுகள் புதிதாக எதனையும் கற்பிக்கப் போவதில்லை. இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பே தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுபகிறது என்று சர்த்தர் வரையறை செய்து விட்டார். மேற்படி கருத்தரங்கு அதை மீண்டுமொரு முறை மறுபதிப்பு செய்திருக்கிறது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.
இந்தக் கருத்தரங்கிள் முடிவில்தான் நாம் "கூட்டு மன அதிர்வு"க்குள்ளாகயிருக்கிறோம் என்பதையே கண்டுபிடித்தோம்.
அண்மைக்காலமாக மோசமடைந்து வரும் களநிலவரங்களினால் தமது அரசியல் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் அதனால் தோற்றம் கொண்டிருக்கும் அரசியல் வெறுமையும் - வறுமையும் ஈழத்தமிழினத்தை எல்லையற்ற தொடர் கிலிக்கும் பீதிக்குள்ளும் அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. இதன் நிமித்தமாக ஈழத்தமிழினத்தின் உள்ளும் புறமுமாக ஒரு தொடர் வலைப்பின்னலாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கு��
�் எண்ணற்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஒரு பதிலாக இல்லாவிட்டலும்கூட, அறத்தையும் நீதியையும் நழுவவிட்டு எம்மை இவ்விக்கட்டான நிலைக்குள் தள்ளியிருக்கும் அனைத்துலக சமூகத்தைத் தொடர்ந்து எதிர்கொள்வதற்கும் அதற்கு எம்மால் தொடர்ந்து
சொல்லப்படக்கூடியதுமான சில முன்முடிவுகளை - தீர்மானங்களை மேற்படி கருத்தரங்கு அடையாளம் காட்டியது. அந்த வகையில் மேற்படி கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இதிலிருந்து எமது ஆய்வை நாம் மேற்கொள்ளத் தொடங்கினோம்.
நாம் இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக மேற்படி சங்கதிகளை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வகையில் இவற்றைத்தான் தேடி அங்கே போனோமோ என்ற சந்தேகம் எமக்கே இப்போது எழுகிறது. ஏனெனில் மனம் ஒரு நிலையில் இல்லை. இது எமது நிலை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினத்தின் நிலை இன்று இதுதான்.
உளவியலில் ஒரு நிலை இருக்கிறது. ஒரு மனித உயிரி தன்னளவில் தான் சக மனிதர்களாலும் தான் வாழும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுவதாக, புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக உணரும்போது அல்லது அவ்வாறு எண்ணத்தலைப்படும் போது ஒரு வகையான வெறுமைக்கும் தனிமைக்குள்ளும் தள்ளப்படும் நிலை தோன்றுகிறது. அந்த நிலையில் அந்த மனித உயிரி அடையும் உளவியல் சிக்கலை "Schizoid" என்று உளவியல் மொழியில் அழைப்பார்கள். இந்த நிலை தொடருமானால் மீளமுடியாத மனப்பிறழ்வுக்குள் அந்த மனித உயிரி தள்ளப்படுவதை நாம் தொடர்ந்து அவதானிக்கலாம். Paul Eugen Bleuler என்ற உளவியல் நிபுணர் இன்றைக்கு 100 ஆண்டுக்கு முன்பே மனித மனம் தொடர்பாக கண்டடைந்த உண்மை இது.
இந்நிலையினூடாக ஒரு உயிரிக்கு உள்ள பெரும்பான்மை சாத்தியம் மீளமுடியாத மனப்பிறழ்வு நிலை அதன்வழி தற்கொலை அல்லது குற்றம் மட்டுமே... இதன் அடிப்படையில்தான் குற்றங்களின் மூலமும் அடிப்படையும் மனச்சிதைவிலிருந்து அல்லது மனப் பிறழ்விலிருந்துதான் தோற்றம் கொள்வதாக உளவியல்வாதம் கட்டமைக்கப்படுகிறது. எனவே ஒரு குற்றத்திற்கு என்று அடிப்படையும் ஒரு மூலமும் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வோம். மேற்படி கருத்தரங்கு இதைத்தான் பல தலைப்புக்களில் பேச முற்பட்டது.
நாம் பயங்கரவாதத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பை மட்டும் இங்கு
விவாதிப்போம். (ஏனென்றால் நாங்கள் "பயங்கரவாதிகள்"தானே.. இந்த கேடுகெட்ட உலகம் அப்படித்தானே சொல்கிறது) பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு ஏகப்பட்ட குழப்பமான விளக்கங்களை இந்த உலகம் முன்வைக்கிறது. எது பயங்கரவாதம் என்பதில் அதை உச்சரிக்கிறவர்களுக்கே குழப்பமான ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கப்படவேண்டியது. அரசுகள்கூட பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்பது இங்கு ஏற்கனவே நிருபிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நாம் இதில் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்வோம்.
பயங்கரவாதம் என்பது பல தருணங்களில் தனிமனிதர்களால் நிகழ்த்தப்பட்டாலும் அது தனிமனித நிகழ்வு அல்ல. எந்த தனி மனிதனும் இங்கு "பயங்கரவாதி"யாக அறியப்பட்டது கிடையாது. அவன் தான் சார்ந்துள்ள ஒரு அமைப்பிற்காக - ஒரு சமுதாயத்திற்காக - இனக்குழுமத்திற்காக என்று ஒரு பொதுச் சிந்தனையின் அடிப்படையிலேயே அந்த செயலை செய்ய முற்படுகிறான். அந்த நோக்கம் சரியானதா தவறானாதா என்பது இங்கு வேறு ஒரு தளத்தில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது. ஆனால் அவனது நோக்கம் பொதுமையானது என்பதுதான் இங்கு முக்கியமானது.
இதைத்தான் சர்த்தர் தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது என்றார். எனவே ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தை தொடர் வன்முறைக்குள் அமிழ்த்தி தொடர்ந்து அந்நிலைக்குள்ளிருந்து வெளியேற விடாமல் - வழி தெரியாமல் மனஅதிர்வுக்குள்ளாக்கி அந்தக் குழுமத்தை மனப்பிறழ்வடையச் செய்யும்போது அந்நிலைக்கு ஒரு எதிர்வினையை அக்குழுமம் பதிவு செய்த போது அதை இந்த கேடு கெட்ட உலகம் "பயங்கரவாதம்" என்று பெயர் சொல்லி அழைக்கிறது. இங்கு அந்த குற்றத்தின் மூலமும் அடிப்படையும் காரண காரியங்களும் அடியோடு மறைக்கப்பட்டது மட்டுமல்ல அந்தக் குற்றவாளிகளை( அரச பயங்கரவாதிகளை) காப்பாற்றும் உலக ஒழுங்கும் வேதனைக்குரியது என்பதுடன்
அச்சமூட்டக்கூடியதும்கூட...
இந்த ஒட்டு மொத்த சாராம்சத்துக்குள்ளிருந்துத��
�ன் நாம் இந்த உலகத்தோடு பேசவேண்டிய - அழுத்தமாகச் சொல்லவேண்டிய முக்கிய பேசுபொருள் வருகிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல் அக் கருத்தரங்கில் நாம் கலந்து கொண்ட நோக்கத்திற்கு மாறாக எதை எதையோ கண்டடைந்தோம். ஏனெனில் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தில் நாங்களும் ஒரு அங்கம். இப்போது முழுத் தமிழினமுமே அதிர்வுக்குள்ளாகியிருக்கிற��
�ு. ளுஉhணைழனை என்ற உளவியல் சொல்லாடல் ஒரு தனிமனித உயிரியின் மனப்பிறழ்வு நிலை குறித்துப் பேசுகிறது. இங்கே ஒட்டு மொத்த இனமுமே அத்தகைய நிலைக்குள்ளாகித் தவிக்கிறது. இதைத்தான் நாம் இப்போது கூட்டு மன அதிர்வு என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வருகிறோம்.
நாம் இந்த உலகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம், தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம், நாம் புறக்கணிக்கப்படுகிறோம், ஒதுக்கப்படுகிறோம் என்று ஒட்டு மொத்த உலகத் தமிழினமுமே அச்சம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தமது அரசியல் வாழ்வியல் எதிர்காலத்தை ஒரு சூனிய வெளியில் வைத்தே புரிந்து கொள்ளத் தலைப்படுகிறது. இதன் வழி முழுத் தமிழினமும் கூட்டு மன அதிர்வுக்குள்ளாகித் தவிக்கிறது. இப்போது சர்த்தாரை மீண்டும் ஒரு முறை அழைப்போம். அவர் சொல்கிறார்,"தொடர் வன்முறைக்குள்ளாகும் ஒரு மக்கள் கூட்டத்தின் மன அதிர்வுகளின் வெளிப்பாடே "பயங்கரவாதமாக" வெளிப்படுகிறது".
உண்மையில் இந்தக் ஆய்வுக்கு "புலிகளின் அழிவுக்குப் பின்னான பயங்கரவாதத்திற்கு யார் பொறுப்பு?" என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில் புலிகளுக்கு "பயங்கரவாதப்" பட்டத்தை சுமத்தி ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் சிங்களத்திற்கும் அதன் பின் நிற்கும் இந்தியா உட்பட மேற்குலத்திற்கும் ஒரு சிறிய செய்தி இருக்கிறது. அதாவது புலிகளின் அழிவுக்குப்பிறகும் நீங்கள் வரைவிலக்கணப்படுத்தி வைத்திருக்கும் "பயங்கரவாதம்" இருக்கும். அதுதான் அந்த செய்தி. எமது ஆய்வின் "பயங்கரமான" செய்தியும்கூட.
ஏனெனில் முழு இனமுமே அதிர்வுக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது. அது ஒரு கட்டற்ற வன்முறையை எந்த நேரமும் யார் மீதும் பிரயோகிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிற��
�ு. அதாவது உளவியல் வாய்ப்பாட்டிற்கமைய இந் நிலையை வரைவிலக்கணப்படுத்தினால் அது ஒரு கூட்டு "Schizoid" நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. "Schizoid" என்ற மனப்பிறழ்வின் உச்சநிலை தற்கொலை அல்லது குற்றம். தமிழினம் நாளை இரண்டில் எந்த முடிவை எடுக்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கப்போகிறவர்கள் சிங்களத்தின் அரச பயங்கரவாதத்திற்கு துணைநிற்கும் அனைத்துசக்திகளும்தான். தற்கொலைகள் தொடங்கிவிட்டது. குற்றங்கள்தான் மீதமிருக்கின்றன...
இப்போது ஒட்டுமொத்த தமிழினமும் இந்த கூட்டு மன அதிர்வு என்ற வரையறைக்குள் எப்படி வந்தது என்பதை நாம் முதலில் பார்ப்பது நல்லது. இது முக்கியமானது மட்டுமல்ல வரலாற்று ரீதியான பல உண்மைகளையும் உள்ளடக்கியது.
தமிழர்களின் போராட்ட சக்திகளான தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு சமாதான காலத்தில் "பயங்கரவாதிகள்" என்று இந்த மேற்குலகம் அறிவித்ததிலிருந்துதான் இந்த அதிர்வு தொடங்கியது. போராடும் காலத்தில்கூட இத்தகைய அறிவிப்பை வெளியிடாத மேற்குலகம் ஒரு சமாதான காலத்தில் இந்த நயவஞ்சக நாடகத்தை அரங்கேற்றியபோது தொடங்கிய இந்த மன அதிர்வுக்கான முதற் பொறுப்பாளிகள் அவர்கள்தான். சிறீலங்கா அரசின் குருரமான கபட நாடகத்தில் மேற்குலகமும் தம்மை ஒரு பங்காளிகளாக்கிவிட்டனவோ என்ற அச்சம்தான் இக்கூட்டுமன அதிர்வின் முதற் புள்ளி.
மேற்குலகத்தின் இந்த மோசமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை சிறீலங்கா இனவாத அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு மேற்குலகம் வழங்கிய ஆசீர்வாதமாகவும் அங்கீகாரமாகவும் கருதியதில் வியப்பேதும் இருக்க முடியாது. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலுள்ள "பயங்கரவாத" கூறுகளை அடையாளங் காணத் தலைப்பட்ட மேற்குலகம் அதன் பின்னுள்ள அறத்தையும் நியாயத்தையும் சீர் தூக்கிப் பார்க்க தவறியிருந்தது. அன்றைய உலக ஒழுங்கும் அதற்கு இடமளித்தது துரதிஸ்டவசமானது.
நாம் மீண்டும் ஒரு முறை சர்த்தரை அழைப்போம். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் ளயசவசந ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றுவாயும் அவர்களின் போராட்ட வழி முறைகளில் காணப்பட்ட "பயங்கரவாத" கூறுகளும் சர்த்தரின் எந்த வியாக்கியானத்தையும் மீறியதல்ல. அவ்வளவு ஏன் இன்றுகூட அந்த கருத்தரங்கின் முன்மொழிவும் புலிகளின் போராட்டத்தின் வழி முறைகளை சமன்செய்பவையேயாகும்.
சர்த்தரின் மேலதிக கூற்றுப்படி, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் ஒரு இனத்தை அடி பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் அவர்கள் பதில் சொல்கிறார்கள். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று அவர்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது அவர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள். அவர்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறார்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் அவர்கள் அதை தமதாக்கிக் கொண்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் வன்முறையின் குழந்தைகள் - இதன் வழி தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையின் குழந்தைகள்.
இதன்வழி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வன்முறை வடிவத்தையும் அதன் வடிவ மாறுதலையும் இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ சூட்ட வேண்டியது "பயங்கரவாத" பட்டங்கள் அல்ல... தமிழினத்திற்கான அரசியல் தீர்வு. மக்களிலிருந்துதான் புலிகள் பிறப்பெடுத்தார்கள். புலிகளை பயங்கரவாதிகள் என்பதற்கும் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்பதற்கும் ஒரு மெல்லிய கோடு இடைவெளியேயுள்ளது.
ஏனெனில் அவர்கள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் தரித்திருக்கிறார்கள். அதற்கான அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இந்த இடைவெளியைத் தவிர வேறு எந்த இடைவெளியும் இரு தரப்பையும் பிரித்துப் பார்க்க உதவாது. அந்த மெல்லிய கோட்டைக்கூட அனைத்துத் தரப்பும் இன்று மெல்ல மெல்ல அழிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில் எல்லோருமே வன்முறையார்களாக மாற வேண்டிய இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிற��
�ு தமிழினம்.
இன்று அனைத்துத்தரப்பும் சொல்வது போல் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்படுமாயின் புலிகளில்லாத ஒட்டு மொத்த தமிழினமும் பிரயோகிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அந்த வன்முறை வடிவங்களை எதிர்கொள்வதற்கு உலகம் தன்னை தயார் செய்வது நல்லது... இது குறித்து அடுத்த வாரம் எழுதுகிறோம்...
000000000000000000000000000000000000000000
புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை
தமிழ்ச்சூழலைச் சேர்ந்த உளவியலை கல்விப்பின்புலமாகக் கொண்ட சில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் செய்த சுயாதீன ஆய்விலிருந்து மேற்படி எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தொடர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் காலத்தின் தேவை கருதி தமது ஆய்வின் முக்கிய விடயங்கள் தொடர்பாக சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்.
Labels: ஈழம்
நன்றி:
http://yuvanprabhakaran.blogspot.com/2009/...og-post_29.html

தேசம், தேசியம், தேசியத் தலைவர் என்று ஒரு இனம் மூன்று தசாப்பதங்களுக்கும் மேலாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டது. அந்த வாழ்வியலினூடாகவே அந்த இனத்தின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த இனத்தின் ஆன்மாவாகவே விடுதலைப்புலிகள் மாறிப்போய்விட்டது யதார்தம். இது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் நடந்தேறிவிட்டது.

தமிழக முதல்வர் கருணாநிதி என் நண்பர்- ராஜபக்சே
வாக் தி டாக் என்று ஒரு நிகழ்ச்சி… என்டிடிவியில் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் எடிட்டராக உள்ள சேகர் குப்தா இதை நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அவர் நேற்று கொழும்புவில் பேட்டியெடுத்துள்ளார். நேற்று முழுவதும் என்டிடிவியில் அதைத்தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல், ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி சேகர் குப்தா கேள்வி கேட்பதையும், பல நேரங்களில் ராஜபக்சேவுக்கே எடுத்துக் கொடுப்பதையும் இதில் காணலாம். தமிழர்கள் மீது வட இந்தியர்களுக்கு இருக்கும் விரோத மனப்பான்மைக்கு இந்த நேர்காணல் நிகழ்ச்சி இன்னும் ஒரு உதாரணம்.
தேர்தலுக்காக தமிழகத் தலைவர்கள்தான் ஸ்டன்ட் அடிப்பதைப் போலவும், இந்த வடக்கத்திக்காரர்கள் ரொம்பத்தான் யோக்கிய சிகாமணிகள் என்பது போலவும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கருத்துருவாக்க முயன்று வருவதைப் பார்த்திருப்பீர்கள். ராஜபக்சேயுடனான பேட்டியிலும் அந்த தொனி சேகர் குப்தாவிடம் வெளிப்பட்டதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
ராஜபக்சேவுக்கு பிடித்த மாதிரி கேள்விகள் கேட்டு, அவரது கருத்துக்களைப் பரப்பும் ஒரு முயற்சியாக… தமிழர்களின் ஹீரோவாக ராஜபக்சேவை சித்தரிக்கும் முயற்சி போலவே இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
“பிரபாகரன் தமிழர் பகுதிகளை மட்டும் ஆளவேண்டும் என விரும்பவில்லை… ஒட்டு மொத்த இலங்கையையும் பிடிக்க நினைத்தார்”, என்கிறார் ராஜபக்சே.
பிரபாகரன் ‘மரணம்’ குறித்த செய்தி தனக்கு 19-ம் தேதிதான் தெரியும் என்றும், இந்தியத் தேர்தலுக்காக தமிழர் அழிப்பு வேலையை தள்ளிப் போடவில்லை என்றும், உண்மையில் இந்த வெற்றியை இந்தியத் தேர்தலுக்கு முன் நாங்கள் பெற்றிருந்தால் இந்தியத் தேர்தலில் காங்கிரஸ் இன்னும் அமோக வெற்றி பெற்றிருக்கும் என்றும் அவர் கூறினார்.
பிரபாகரன் விஷயத்தில் இந்தியத் தமிழர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை என்றும், அவர் ‘மரணம்’ முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பாதிப்பும் தமிழ்நாட்டில் வந்திருக்காது என்றும் உறுதியாகக் கூறினார் ராஜபக்சே.
பிரபாகரனைக் ‘கொல்வது’ குறித்து இந்தியாவுக்கும் தனக்கும் பேச்சுவராத்தைகள் நடந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் ராஜபக்சே.
தமிழக விவகாரங்கள் குறித்துக் கேட்டபோது,ஜெயலலிதாவுக்கு மக்கள் பதில் சொல்லி விட்டார்கள் என்ற ராஜபக்சே, தமிழக முதல்வர் கருணாநிதி தன் நண்பர்; தனது விருந்தாளியாக அவர் இலங்கைக்கு நிச்சயம் வரவேண்டும் என்றும் அவர் இந்த நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டார். ஜெயலலிதாவும் கூட இலங்கைக்கு வரலாம் என்றார் ராஜபக்சே.
வைகோவைப் பற்றி பேசும்போது, அவர் இலங்கைக்கு பாஸ்போர்ட்-விசா இல்லாமல் வந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். உடனே, இந்தக் குற்றத்துக்காக அவரை கைது செய்வீர்களா என சேகர் குப்தா கேட்கிறார்.
“அவர் தேர்தலில் தோற்றுவிட்டார் அல்லவா… அப்புறமென்ன… நான் அதை மறந்து மன்னித்துவிட்டேன்!”, என்கிறார் ராஜபக்சே.
அட கொடுமையே…
குறிப்பு: இந்தப் பேட்டியைப் பார்ப்பவர்களுக்கு ராஜபக்சேயின் ‘ஆங்கில அறிவு’ தெளிவாகப் புரியும். அவர் சொல்ல நினைப்பதும், அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் முரண்படுவதைக் காணலாம். நாம் இதைக் குறிப்பிட்டு கிண்டலடிக்க வேண்டாம் என்பதாலேயே அதை செய்தியில் குறிப்பிடவில்லை.
பிரபாகரன் செய்த பெரிய தவறு என்ன என்ற கேள்விக்கு ராஜபக்சே முதலில் தரும் பதிலைக் கவனித்து அதற்கு தமிழர்த்தம் சொல்லுங்கள்!
http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை - ஸ்கொட்லண்ட் யார்ட்
Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.
SHORT HISTORY ABOUT OUR NATIONAL EELAM FLAG: National flag is essential to any nation that struggle for independence. It symbolizes national integrity, unity and sovereignty. It also characterizes patriotism of a nation. And it is been the grass root of political freedom. Tamil people of Eelam, who struggle for freedom, do have a national flag. On the second national heroes day(27.11.1990), the Tiger flag has been adopted as national flag Tamil Eelam.

Saturday, 30 May 2009
இனி என்ன?
தமிழில் இனிப் பதிவெளிதி எதுவித பிரியோசனம் இல்லை என்னும் நிலையில் எதுவும் எழுதாது , கடந்த ஐந்தாறு மாதங்களாக என்னால் முடிந்த அனைத்தும் செயற்பாட்டு ரீதியாகச் செய்தாகி விட்டது.
பிரித்தானியாவில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்த கூட்டங்கள் ,சந்திப்புக்கள்,வீதி மறியல்,உண்ணாவிரதம், பேரணி என ஒரளவு எமது கதையையை பரவலாகச் சொல்லியாகி விட்டது.பிரித்தானியாவின் அரசியலாளர்கள்,பிரதான ஊடகங்கள் என இன்று ஓரளவு கவனிப்பு இருக்கிறது.ஐனாவிலும்,மனித உரிமை கவுனிசிலும் பேசியாகி விட்டது.இருபதினாயிரம் மக்கள் எந்த சாட்சியமும் இன்றி கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள் என்று டயிம்ஸ் ஆதாரத்துடன் கட்டுரை எழுதுகிறது.ஐ நா வினால் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாக இப்போது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.இவை எல்லாவற்றையும் பார்க்கையில் நாம் ஏற்கனவே அறிந்திருந்த முடிவு தான் எம் கண் முன் வருகிறது.இந்த உலகம் சுய நலங்களின் அடிப்படையிலேயே பொதுவாக இயங்கிறது.அது கருணானிதியின் பதவி மோகம் என்றாலும் பான்ங்கிமூன், சதீஸ் நம்பியார், சோனியா, நாரயணன் குழு என எல்லோரும் சொந்த நலங்களால் இயங்கிறார்கள், இயக்கப்படுகிறார்கள்.இவற்றுக்கு எதிராக ஆங்காங்கே ஒரு சிலர் உண்மைக்காகவும்,மனித நேயத்துக்காகவும் தமது உயிரைக் கொடுத்து போராட வேண்டி உள்ளது.
இந்த நிலையில் தமிழ்ப் பதிவுலகிலும் புலிகளின் தமிழ்த் தேசிய விடுதலைப் போர் வெற்றியடையும் தோற்றப்பாடு இருந்த நிலையில் பல் வேறு நாடுகளில் பாதுகாப்பாக இருந்த வண்ணம் நாமும் புலிகளுடன் தான் எனச் சொந்தம் கொண்டாடிய பதிவர்கள் இன்று பிச்சை வேண்டாம் நாயயைப்பிடி அல்லது அன்று நாம் மவுனமாக இருந்தோம் இன்று புலி அழிந்த பின் புலியைப்பற்றி பேசுகிறோம் அல்லது நாம் எழுதிய இராணுவ ஆய்வைப் புலிகள் பொய்க்க வைக்க வைத்திட்டார்கள் என்பது போன்ற மன நிலையில் இருந்து தம்மைப் புனிதர்களாகக் கட்டமைத்து எழுதும் பதிவுகளுக்கு ,எதிர்வினை ஆற்ற வேண்டும் என்னும் நிலையிலையே இந்தப் பதிவு.
புலிகள் தவறைழைந்தனேரே, அவர்கள் பூகோள நலங்களின் அடிப்படையில் தொழிற்படும் இந்த உலகில் தமக்கென ஒரு நலன் சார் கூட்டை உருவாக்கமால், தனத்து நின்று இந்த உலகின் போரை எதிர்கொண்டனர்.சாதூரியமாக காய் நகர்த்திய சிறிலங்கா இந்தியா,சீனா போன்ற வளர்ந்துவரும் பிராந்திய ஏகாதிபதியங்களிடம் இருந்து அதி உச்ச உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.இந்தியா கடல் வழி முற்றுகையை இறுக்கியது, புலிகளின் பல ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டன.சீனா குண்டு வீச்சு விமானங்களை இலவசமாக வழங்கியது.பாக்கிஸ்த்தான் நவீன வேவு விமானங்களையும் போர்த் தளபாடங்களையும் வழங்கியது.இந்த நிலையில் போர் என்பது சிறிலங்கா அரசிற்குச் சாதகமாகவே இருந்தது.இவை அனைத்தையும் நாம் ஒன்று பட்டு எமது மன உறுதியினால் எதிர்கொள்வோம் என்று புலிகள் நம்பினார்கள்.மன வலுவுடன் மூர்க்கமாகத் தாக்கினால் சிங்கள இரானுவத்தை நிலை குலைய வைக்கலாம் என்று நம்பினார்கள்.அந்த அதீத நம்பிக்கையே அவர்களை மக்கள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் குவிய வைத்தது.குறிப்பாக புதுக் குடியிருப்புத் தாக்குதற் தோல்வியுடன் புலிகளின் தலமை தம் மீதே நம்பிக்கையீனம் அற்று, தம் கண் முன்னால் நிகழும் இழப்புக்களின் தாக்கத்தில் தம்மையே அழித்துக் கொள்ளும் திட்டத்துடன் தொடர் போராட்டத்தில் நம்பிக்கையற்று வென்றால் வாழ்வு தோற்றால் சாவு என்னும் நிலைப்பாட்டுக்கு வந்து இருந்து போல் தெரிகிறது.தம் முன்னால் நிகழும் மனிதப்பேரவலம் அவர்கள் மேல் கடுமையான மன அழுத்ததைப் பிரயோகித்து இருக்கலாம்.இந்த நிலையில் அவர்கள் போராட்டம் பற்றி அறிவார்ந்து சிந்திக்காமால் பல பிழையான முடிவுகளை எடுத்து இருக்கலாம்.மக்கள் மீதான வன் முறையையும் நாங்கள் அவ்வாறே நோக்க வேண்டும்.புலத்தில் பாதுகாப்பான சூழலில் நாம் இருக்கும் நிலையில் சிந்திப்பதற்கும், கடுமையான மனிதப் பேரவல நெருக்கடிகளுக்குள் இருந்து சிந்திக்கும் சூழலுக்கும் வேறு பாடு இருக்கிறது.
போராட்டத்தின் எதிர்காலத்தை ,தமது பலவீனம் எது , பலம் எது , எதிரியின் பலம் எது பலவீனம் எது என்பவற்றில் இருந்து கணிக்கத் தவறியது தலமைத்துவக் குறைபாடே.எல்லாக் குறைபாடுகளுக்கும் அப்பால் அவர்கள் தமிழ் மக்களுக்காகவே உண்மையாகப் போராடினார்கள், தமது உயிரை தாம் கொண்ட இலட்சியதுக்காகக் கொடுத்தார்கள்.வெற்று வார்த்தைகளை உதிர்ந்து தமது சொந்த விடயங்களைப் பார்த்துக்கொள்ளாமால் , இணையத்தில் பொழுது போக்காப் புரட்சி செய்யாமால், தமது தீர்வை நோக்கிய செயற்திட்டத்துக்கு தமது இன்னியுரை அர்ப்பணித்தார்கள்.அவர்கள் பிழைகள் விட்ட உயரிய மனிதர்களே,கடவுளர் அல்ல.
இனி என்ன?
இத்தோடு இந்தப் போர் ஓய்ந்து விடுமா? புலிகளும் பிரபகாரனும் , தமிழர் மீதான ஒடுக்குறை பிரசவித்த குழந்தைகள்.மிகக் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்படும் தமிழர்களிடம் இருந்து இன்னும் மிகக் கொடூரமான குழந்தையே பிறக்கப் போகிறது.அதை இந்த உலகம் எதிர் கொள்ளத் தான் வேண்டும்.அதுவரை எம்மால் இப்போது செய்ய வேண்டியது சிறிலங்கா அரசால் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் , வதை பட்டுக் கொண்டிருக்கும் மூன்று இலட்சம் மக்களையும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பக் கொண்டு வருவதே.அவர்களை இந்தக் கொடூரமான முகாம்களுக்கு வெளியால் கொண்டுவர வேண்டும்.இதனை செய்வதே எமது தலையாய கடமை.நாம் இதனைச் செய்யாது புலிகளைப் பற்றியும் பிரபகாரனைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பதில் எந்தப் பிரியோசனமும் இல்லை.இவை ஏற்கனவே வெறும் வாயை மென்று கொண்டு இருப்பவர்களுக்கு அவலைக் கொடுதற்குச் சமனாகும்.
புலிகளுக்கும், பிரபாகரனுக்கும் நாம் செய்யும் மிகப் பெரிய அஞ்சலி அவர்கள் நேசித்த அந்த மக்களைக் காப்பதே.இதை விடுத்து நாம் எமக் குள்ளாகவே அவர்,பிழைவிட்டர், இவர் வியாபாரம் செய்தார் அதனால் தலமை அழிந்தது என்று ஆதாரம் எதுவுமின்றி நொண்டிக் குற்றச்சாட்டுக்களை ஊகங்களின் அடிப்படையில் எழுதிக் கொண்டிருப்பது மிகத் தவறான அணுகுமுறை.இவை தேவையற்ற பிரிவினைகளை உருவாக்கி எம்மையே பலவீனப்படுத்தும்.எந்த இலட்சியத்திற்காக ஆயிரம் ஆயிரம் மிக உயரிய மனிதர்கள் தம்மை அர்ப்பணித் தார்களோ அவர்களின் தியாகங்கள் வீணாகி விடக்கூடாது.
இன்னொரு பிரபகாரன் அவதரிக்கும் வரை நாம் அமைதி காத்து நிதானமாகச் செயற்பட வேண்டும்.ஒற்றுமையே பலம்.அறிவார்ந்த செயற்பாடும், அரசியற் தெளிவும் , மன உறுதியுமே எம்மை வாழ்விக்கும்.

Monday, 4 May 2009
ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய காணொளி காண் திரையில்
எம் இனிய உறவுகளே!
இக் காணொளி ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம். தயவுசெய்து இக் காணொளியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்
கானொளி காண் திரையில் click to play என்பதை அழுத்தி முகப்பிலேயே காணொளி காண்க.
நன்றி.
http://www.paristamil.com/tamilnews/?p=6845

Subscribe to:
Posts (Atom)